போலித்தனங்கள்

புகைப்பான்* புகைத்தான்
புற்றுநோய் வளர்ந்தது
புதுவிளக்கமும் கொடுத்தான்.

அடிவயிறு பசியால்
அலறினால்...
அதற்கும் ஒரு புகைப்பான்*.
அறிவுகெட்ட அதிமேதாவி
அடங்கிடும் பசியென்பான்.

புரிந்துடா காதல்...
விரும்பிடா காதலி...
விரும்பிடும் விழியின்
நினைவை மறக்க...
புகையை இழுக்கின்றானா..?
புளித்துப்போன காரணம்..!

அவள் ஒருத்திக்கு தீங்கிழைக்க
அவனுக்கு மனமில்லையாம்...
ஆயிரம் நல்லோருக்கு தீமூட்டுகின்றான்
அவன் இழுத்துவிடும் புகையால்...

* புகைப்பான் – சிகரெட்

**************
சிகுவரா
ஜூலை 2004 ல் எழுதப்பட்டது.

எழுதியவர் : சிகுவரா (17-May-17, 9:31 pm)
பார்வை : 136

மேலே