குழந்தையின் குரல்

குழல் இனிது யாழ் இனிது என்பர் ;
குழந்தை சொல் கேளாதோர் !
வறுமையே வாட்டினாலும் ;
வசந்தத்தை வீசுமே அந்த குரல் !

மழலையின் குரல் கேட்டு -
மறந்துபோன சொந்தம் கூட -
மனை நோக்கும் மாயமென்ன !
மந்திரமா அல்ல தந்திரமா ?

அறிவில் நீ ஆசானே ஆனாலும் ;
புரியாத மொழிதனிலே -
பேசும் அந்த குழந்தையின் பேச்சுக்கும் :
சரிசமமாய் பதில் கொடுக்க -
சந்தோசம் ஒன்றைத்தவிர ;
சாதித்ததும் நினைவில் இல்லையே !

கோபத்தை போக்கிடுமே !
கொள்கையை மறந்திடுமே !
கஷ்டத்தை கரைத்திடுமே !
வேதனையை விரட்டிடுமே !
கூட ஒரு குழந்தை மட்டும் இருந்தால் போதும் !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (22-May-17, 10:46 am)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
Tanglish : KULANDHAIYIN kural
பார்வை : 154

மேலே