கைபேசி தந்த காதல் வாலறுந்த காற்றாடியாகியது
இது ஒரு கைபேசி இணையதளம் கைங்கர்யம்
இருவரை காதல் கொள்ள செய்ட்து
அவள் அவனை நேரில் காணாமலேயே
அவன் மீது அபரிமித காதல் கொண்டாள்
காதல் தொடர்ந்தது கைப்பேசி வாட்ஸுப் மூலம்
இதோ நாளை அந்த கோவிலில்
உற்றார் உறவினருக்கு தெரியாமல்
திருமணம் செய்துகொள்ள அவன் விண்ணப்பம்
வதுவையும் ஏற்றுக்கொண்டாள்-ஒன்றும் கூறாமல்
இதற்கிடையில் அவள் அவன் வேண்டுகோளுக்கு
இணங்கி அவ்வப்போது பணஉதவி செய்துவந்தால்
எல்லாம் இணைய தளம் மூலமாக .................
அந்த நாள் வந்தது தன ஆசை காதலனை
நேரில் கண்டு கண்டதும் காதலன்
கணவன் ஆகிவிடுவான் அந்த கோயில் ஆண்டவன் முன்னே
என்று இவள் கற்பனையில் .....................
இதோ அந்த கோவில் வாசலில் அவள்
அவனுக்காக காத்திருந்து , கால்கள்தான்
கத்திரி வையலில் சுட்டு போனது ..........
அவன் வரவில்லை , வரவும் மாட்டான்
அவன் இப்போது கைப்பேசியில் இல்லை
வாட்ஸுப்,எதிலும் இல்லை
காற்றடிக்கும் தூற்றிக்கொள் என்பதற்கிணங்க
அவன் அவள் காதல் மயக்கத்தில்
தனுக்கு தேவை பணத்தைமட்டும் பெற்றுக்கொண்டான்
நல்லவேளை அவளை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டான்
கைப்பேசி காதல் காற்றில் பறந்துபோனது
ஏமாற்றத்தில் அவள் வால்ரந்த காற்றாடிபோல்
குத்திட்டு அங்கே கோவில் வாசலில் குந்தி இருக்க
இன்னும் வருவான் என்று காத்திருக்கிறாளோ
பெண்களே கைபேசியை வாழ்வென்று எண்ணாதீர்கள்
வாழ்க்கை செல்லரித்த பைபோல் ஆகிவிடும்
உங்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும்
நல்ல பாதையில் வாழ்க்கை மைய பெரியயோரை
நம்புங்கள் ,தாய்,தந்தையரை
வளமான வாழ்க்கைக்கு