இசை

இசை...

இசை...
பஞ்ச
பூதங்களின்
மொழிப்ரவேசம்!

இசை...
ஓரறிவு உயிரி முதல்
ஆறறிவு உயிரி வரை
கொள்ளும் ரகசிய காதல்!

இசை....
உயிரினங்கள் எழுப்பும்
ஒலி அலைகளின்
கரு உருவாக்கம்!


இசை...
மொழி பேதமின்றி
எங்கும் வியாபித்திருக்கும்
சுதந்திரவாதி!

இசை....
தென்றலாய் செவியினுள்
உட்புகுந்து மனக்குப்பைகளை அகற்றும்
துப்புரவாளி!

இசை...
குணமாக்க முடியாத நோய்களை
குணமாக்கும் மருந்தில்லா
மருத்துவர்!

எனவே...

இசை எனும்
காற்றை சுவாசித்து
இன்பமாய் வாழ்வோம்!!

எழுதியவர் : உமா (22-May-17, 4:36 pm)
Tanglish : isai
பார்வை : 187

மேலே