நீ வேண்டும்

என் இருண்ட வானத்தின்
நிலவு நீயாகிறாய்.
****
உன் பார்வைக்கு மட்டுமே நான் வேண்டும்,
என் ஆயுளின் அரசி நீயாக வேண்டும்.

காதல் திருமணம் வேண்டும்,
திருமணத்தின் பின்- என் கவிதை
நீயாக வேண்டும்.

என் இரவுகளுக்கு விருந்தாக வேண்டும்
என் இளமைக்கு இரையாக நீ வேண்டும்,

உன் கையில் என் குழந்தை வேண்டும்
என் காதல் குழந்தையாய் நீ வேண்டும்,

பொழுதுகளை வழியனுப்ப
உன் புன்னகை வேண்டும்
தினமும் பூக்களாய் மலர்வதற்கு
உன் இதழ்கள் வேண்டும்,

தூரத்தில் நின்று நீ சிரிக்க வேண்டும்
என் தோளில் சாய்ந்து நீ அழ வேண்டும்,

உன் மடியில் நான் மரணிக்க வேண்டும்
மீண்டும் நான் ஜனனிக்க வேண்டும்
உனக்காக மட்டுமே............!!!!!!

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (22-May-17, 7:26 pm)
Tanglish : nee vENtum
பார்வை : 1701

மேலே