காத்திருப்பு காதலின் கௌரவம்

பெண்ணே !
நீ அமிர்தமா அமிலமா
தெரியவில்லை !
ஆனால்
உன்னால்தான் தீரும்
என் தாகம் !

நீ தேன்துளியா தீப்பிளம்பா
புரியவில்லை
ஆனால்
உன் ஸ்பரிசத்தால்
மட்டுமே தீரும்
என் தேடல் !

உன் இத்ழ்களுக்குள்
மறைத்து வைத்திருப்பது
புன்னகையா, பூகம்பமா
தெரியவில்லை
ஆனால்
உன் இதழசைவில்தான்
ஒளிந்திருக்கிறது
என் எதிர்காலம் !

காதலில் மூழ்குவதும்,
கடலில் மூழ்குவதும்
ஒன்றுதான் !
முத்தெடுத்து மீண்டு வரலாம் !
அல்லது மூழ்கி கதை
முடிந்தும் போகலாம் !

உன் பதில்
எதுவாக வேண்டுமானாலும்
இருக்கட்டும் !
அதுவரை காதலின்
கதகதப்பில் லயித்திருக்கிறேன் !

காத்திருக்கும் கனங்கள்
ரணமானவையாம் !
இல்லை , இல்லை
காதலுக்காக காத்திருக்கும்
கனங்கள் கௌரவமானவை !

உன் கண்ணசைவில்
என் காதலுக்கு
இசைவு கிட்டும் வரை
காதலுடன் காத்திருந்து,
நம் காதலை
கௌரவப்படுத்துகிறேன் !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (29-May-17, 6:15 pm)
சேர்த்தது : காளிமுத்து
பார்வை : 93

மேலே