சிறிதளவு விஷம் தானே என்று உண்டாலென்ன
இரு பெரிய பாத்திரங்களில் சைவம், அசைவமென அறுசுவை உணவைச் சமைத்து வைத்து,
ஒரு சிறு பாட்டில் விஷத்தை உண்ணச் செல்வோர் காண்க,
அறுசுவை உணவில் கலந்து உண்ணச் சொன்னேன், என்ன செய்கிறார்களென்று பார்ப்போமென...
ஆரோக்கியமான உணவாயினும் விஷம் கலந்தால் முழுவதுமே விஷமென்றாகுமே என்று உணர்ந்த விருந்தினர், " என்ன நினைத்திருக்கிறாய் எங்களைப் பற்றி? விஷம் கலந்த உணவை உண்ண வைத்து எங்களைக் கொல்லப் பார்க்கிறாயா? ", என்றனர் கோபமாய்...
"ஹாஹா", என்ற சிரிப்பில் தொடங்கிய நான், " இரண்டு மிகப் பெரிய பாத்திரங்களிலும் அறுசுவையான ஆரோக்கியமான உணவே நிறைந்திருக்கிறது. அதில் சிறிது தானே விஷம் கலந்தேன். அதற்குப் போய் பதறுகிறீர்களே...
ஒவ்வொரு நாளும் உங்களுடைய மனதை நிரம்பி வழியும் விஷத்தைக் கண்டு
உணர்ந்து என் உள்ளம் எவ்வளவு பதறுகிறதென்று நீங்கள் அறிவீர்களா??...
", என்று முடிக்க விருந்தினர் முகங்களெல்லாம் வாடி தலைகள் தொங்கிவிட்டன, தங்களுடைய குற்றத்தை உணர்ந்ததன் அடையாளமாய்...
கதை உணர்த்தும் நீதி:-
தீவிரவாதம், வன்முறை, தீஞ்சொற்கள் ஆகியவை கொடிய விஷங்கள்...
அவற்றால் நன்மையேதும் விளையப் போவதில்லை...
மாறாக, அவை அழிவின் தொடக்கமாகவே அமையும்...