ஒருநாள் கல்லூரியில்

எழுத்து இணையம் உறவுகளுக்கு என் வணக்கம். இது என் கல்லூரியில் நடந்த ஒருநாள் நிகழ்வு, அதனை இங்கு கதையாக சொல்கிறேன். ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்....

ஒருநாள் என் கல்லூரியில் இருந்து அழைப்பு வந்தது. அது எங்கள் பட்டமளிப்பு வழங்கும் நிகழ்ச்சியின் அழைப்பு ஆகும். அந்த அழைப்பு வந்த மறுநாள் எங்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற இருந்தது.


அன்று முழுவதும் எனக்கு தூக்கம் இல்லை நான் எப்போது விடியும் என்று விழி மூடாமல் விழி திறந்து காத்துக்கொண்டு இருந்தேன். விடிந்தது இரவு வந்தது காலை. நான் எப்போதும் கல்லூரிக்கு செல்வது போல் இரண்டு ஆண்டுகள் கழித்தும் அதே நேரத்தை பின்பற்றிவிட்டேன்.


நான் கல்லூரி பேருந்திற்க்காக காத்துக்கொண்டு இருந்தேன். என் கல்லூரி பேருந்தும் வந்தது. நான் என் இடத்தில் அமர்ந்தேன், "நான் ஒரு ஜன்னல் ஓர இரசிகன். எனவே அன்றும் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தேன்.

பேருந்து செல்ல தொடங்கியது. நான் கண்டு இரசித்த என் பழைய நினைவுகள் எல்லாம் மீண்டும் என்னை பின்தொடர்ந்தது. நான் என் பழைய நினைவுகளுடன் என் கதையை பின் தொடர்கிறேன். பிடித்திருந்தால் நீங்கள் என் கதையின் வரிகளுடன் என்னை பின் தொடருங்கள்.

என் கல்லூரி கிராமத்திற்க்கும், நகரத்திற்க்கும் இடைபட்ட ஒரு கல்லூரி. எனவே அங்கு கிராமபுற இயற்கை எழிலுடன் எப்போதும் இயங்கி கொண்டே இருக்கும். நான் அதனை இரசித்துக் கொண்டே இருப்பேன். அதனால் தான் அதனை இன்றும் இரசித்து விட்டு வந்தேன்.

ஒரு வழியாக நான் என் கல்லூரி வந்து அடைந்தேன். இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்பு இன்று மீண்டும் என் கல்லூரி வாயிலில் நுழைந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் மூடிவைத்த ஒரு தனி சுவாசக் காற்று இன்று திறந்தது போல நான் அதனை அங்கு உடர்ந்தேன்.

பிறகு நான் என் கல்லூரியில் என் வகுப்பு அறைக்கு சென்றேன். அங்கு யாரும் இல்லாமல் நான் மட்டுமே என் வகுப்பு அறையில் நுழைந்தேன். அப்போதுதான் ஒரு அதிசியத்தை கண்டேன்.

எங்கள் அறைகளில் நானும் என் நண்பர்கும் ஒன்றாக சேர்ந்து கிறுக்கிய கிறுக்கல்களும், ஒவியமும், பெயரும், கவிதையும் அது எல்லாம் எங்களை விட்டு அழியவில்லை. அப்படியே இருந்தது. உள்ளே சென்ற நான் அதனை கண்டு அங்கு உறைந்து நின்றேன், உருகமுடியவில்லை.

இறந்த பிறகும் வாழும் சில உயிர்களை கண்டு உள்ளேன், ஆனால் அதனை இன்று தான் முதல் முதலில் இங்கு கண்டேன். செதுக்கப்பட்ட என் ஜன்னல்களும், என் மேசைகளும் இன்று என்னுடன் பேசுகின்றத, நான் பேசி சென்ற கதைகளை எல்லாம் மொத்தமாக சேர்த்து. அப்போது என் இதயத்தை தொட்ட என் நினைவுகளை கொடுத்த என் இடத்தில் என் இதழ்களால் முத்தமிட்டேன்.

தனியாக உள்ளே சென்று இருந்த நான் அப்போதுதான் என்னை தவிக்க வைத்த ஒரு நிழலினைக் கண்டேன். உணரவில்லை என்று என் உதடுகள் சொன்னால் உடனே என் உள்மனம் சொல்லும் அது பொய் என்று அதனால் உண்மையை சொல்லிவிடுகிறேன்!. அது என் காதல் நினைவுகள் தான்.

என் காதலின் முதல் வரியை சொல்லத் தொடங்கினால் முழு ஆண்டும் போதாது. ஏன் தெரியும்?! அது என் முதல் காதல், முகத்தில் மீசை அரும்பியபோது அன்பென்று கிடைத்த காதல் அதுவே, அது மட்டுமே.

பிறகு சில நாழிகை கழிந்த பிறகு என் நண்பர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் கண்டேன். கடலில் தவறிய தவம் ஒன்று கண் எதிரே கண்டேன். அதுதான் என் நட்பு. ஆயிரம் நட்புகளை கடந்து வந்தபோதும் கல்லூரி நட்பினை போன்று நான் எதையும் இதுவரை கண்டதில்லை. அதனை மீண்டும் இப்போது காண்கிறேன். ஒருவரை ஒருவர் அறிமுகபடுத்திக் கொண்ட காலம் மறைந்து, இன்று ஒருவர் ஒருவரை அறிமுகம் படுத்தும் அளவில் நாங்கள் வளர்ந்து இருந்தோம்.

விழிகள் தொலைத்த என் நண்பர்களை எல்லாம் இன்று விதி சேர்த்தது என்று நினைத்துக் கொண்டு பேச தொடங்கினோம், எங்கள் நினைவுகளை. எங்கள் நினைவுகளை முழுவதும் பேசத் தொடங்கினால் நேரம் போவதே தெரியாது. ஆனால் நெருங்கிவிட்டோம் எங்களுக்கு பட்டம் அளிக்கும் நேரத்தினை.

வானில் பறக்கும் பட்டத்தினை வியந்து பார்த்த நாங்கள் இன்று எங்கள் வாழ்வில் பட்டத்தைப் பெற்றுவிட்டோம்.

ஆண்,பெண் என்ற இனம் மறைந்து நாங்கள் எல்லாம் இன்று மாரிவிட்டோம் மாணவர்கள் என்று. மதம், இனம் போன்ற எல்லாம் சேர்ந்து மறைந்தது என்றும் போலவே இன்றும்.

பிறகு நாங்கள் பிரிய வேண்டிய நேரமும் எங்களை நெருங்கிவிட்டது. விதியே மறக்க செய்தாலும் இனிமேல் எங்கள் விழி மறக்காது, நாங்கள் ஒருநாள் கல்லூரியில் ஒன்றாக விரல்பிடித்து நின்ற அந்த நேரங்களை...................
..........................................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (15-Jul-17, 7:35 pm)
Tanglish : orunaal kalluriyil
பார்வை : 839

மேலே