நட்பு
நல்ல நட்பு கற்பகத் தரு
என்றால் தீய நட்பு
தீமைத் தருவதோடு நில்லாமல்
நாடிடும் நண்பருக்கு பேரழிவையும் தரும்
இதைத்தான் இந்திய சரித்திரத்தில்
எட்டப்பன்-கட்டபொம்மன்
மீர் ஜாபார்-சிராஜ் உதவுலா
சரித்திர ஏடுகள் கூறுகின்றன
இதனால் தான் நல்ல நட்பை
தேடி அடைதல் வேண்டும்
நட்பில், நட்பால் நண்பர்கள் உயர்ந்திட