தென்றலாய் வந்தாள் இதயம் உடைத்தாள்

கடல் குளித்த கோடைத் தென்றல்
உடல் வருடியது அவள் அருகே வந்த போது
முரல் மீனின் முள்ளாய் வந்து அவள்
விளிகளால் என்னைக் குற்றி நின்றாள்
செவ்வடை இதழில் ஊறிய தேன் துளிகள்
என்னுடலெங்கும் பட்டுத் தெறித்தன
நான் நிலை குலைந்து போனேன்
கண்ணாடித் துண்டுகள் போன்று
என் இதயம் உடைந்து சுக்கு நூறானது

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (16-Jul-17, 2:41 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 79

மேலே