காதல்-காதலியின் கண்ணழகு

பெண்ணே உன்னைக் கண்டேன்
உன் கண்களைக் கண்டேன்
அதில் ஆயிரம் ஆயிரம்
கதைகள் பேசும் விழிகள் கண்டேன்
அதில் உன் பார்வை என் மீது
காமன் தொடுத்த மலர் அம்பாய்
விழுவதைக் கண்டேன்
மை இட்ட இமைகள் கண்டேன்
மூடி திறக்கும் அவ்விமைகளில்
உன் குறும்பின் நளினம் கண்டேன்
புருவங்கள் கண்டேன்
இல்லை இரு வான வில்லைக் கண்டேன்
மீண்டும் உன் கண்களை பார்த்தேன்
மாசிலா உன் முகத்தில்
நீராட வந்த இரு கயல்களோ இவை
என்று வியந்து நின்றேன்
விழிகளை பார்த்தேன்
தேனுரும் விழிகள் என்னை
மயக்க நான் வண்டாய் மாறி
உன் கண்களின் வாயிலில்
மொய்த்துக் கிடந்தேன்

இப்படித்தான் பெண்ணே
என்னருமைக் காதலியே
உந்தன் கண்களின் அழகு
என்னை ஒவ்வொரு முறை
உன்னை பார்க்கையில்
ஏதோ ஒரு காவியம் சொல்ல
தோன்றுதடி

இப்படியே உன் கண் அழகில்
நான் மயங்கி கிடந்தால் கண்ணே
எப்போது உந்தன் மேனி
அழகைக் காண்பேன்
கண்ணே, கண்ணகியே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Jul-17, 2:50 pm)
பார்வை : 134

மேலே