கவிதை தொகுப்புகளாகின

என் விழிகளும்
உன் விழிகளும்
பேசி தீராத
மிச்ச கதைகளை
எல்லாம் எழுதிவைத்தேன்
அலமாரியின் அடியில்
ஒளித்துவைத்த நாட்குறிப்பில்!

அதை எல்லாம்
கொஞ்சமும் கூச்சமின்றி
வாசித்த என் தோழி
சொல்லிதான் தெரியும்
அவை எல்லாம்
கவிதைகள் என்று!!.

அன்று உன் விழிகளும் என் விழிகளும்
பேசி தீராத மிச்ச கதைகள் எல்லாம்
அலமாரியின் அடியில் ஒளித்துவைத்த நாட்குறிப்பில்
இன்று அவை என் கவிதை தொகுப்புகளாகின்றன.....


யாழினி வளன் ...

எழுதியவர் : யாழினி வளன் (16-Jul-17, 4:48 pm)
பார்வை : 75

மேலே