என்னுயிரைச் சேர்ந்திட ஓடி வா
உன் உறவுக்காக ஏங்கும் என் தனிமைக்குள்
எத்தனை ஏக்கங்களும் தாக்கங்களும் என்று
உனக்குப் புரியுமா ?
உனக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்று
உன்னிடம் மட்டும் தூது விட்டேன்
என் மன ஆசைகளை
நீ விரைவில் என்னைச் சேர்வாய் என்ற
ஆதங்கம் எனைச் சூழ
உன்னிடமிருந்து வரும் செல்போன் சினுங்கல்களில்
நீவரும் சேதிவருமா எனத் தேடினேன்
ஒருபோதும் அது எனக்கு கிடைத்ததில்லை
நான் கதறும் போது என் கண்களில் சிந்திய கண்ணீர்
நான் பதறும் போது நெஞ்சினில் கொதிக்கும் செந்நீர்
நான் விரகதாபத்தில் மூழ்குகிறேன்
என்றுதான் நீ வருவாய் என்னிதயக் கண்ணாளா ?
என் நெஞ்சினிலே உன்முகம் தைத்தேன்
நீ வரும் வழியில் என் விழி வைத்தேன்
என்னை அள்ளிக் கொள்ள ஓடி வா
அதுவரை இங்கு உன்நினைவோடு
குற்றுயிரும் குறையுயிருமாய் நான் வாழ்கிறேன்
அஸ்லா அலி