அஸ்லா அலி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அஸ்லா அலி |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Jun-2017 |
பார்த்தவர்கள் | : 555 |
புள்ளி | : 50 |
கவிதை எழுதுவதில் மிகுந்த ஆற்றல்
என் பெயரைக் கூப்பிடும் போது
என் தலை திரும்புகிறது
உன் பெயரைக் கூப்பிடும் போது
என் இதயம் திரும்புகிறது
நீ தரையில் நடப்பது
ஊருக்குத் தெரியும்
என் மனதில் நடப்பது
யாருக்குத் தெரியும்
என்னை உண்ணத்தான் உதடுகள் திறக்கவில்லை
உமிழக்கூடவா முடியவில்லை?
தொலைந்த நான் கிடைத்தேன்
உன் விழிகளால்
என் விழிகளில்
உன்னைத் தேடினாயே
அப்போது........
ஊருக்குள் அழகன் அவன்
அவன் உள்ளத்தை யாரிவார்
உறவுகளுக்கோ உத்தமனாம்
உள்ளதெல்லாம் யாரிவார்
அழகான பெண்ணைக் கண்டால்
ஆளைப் பிடிக்கத் தேவையில்லை
அத்தனை பெருமை சொல்வான் அவளிடம் அவனைப்பற்றி
இளமைக் காலமதில் எத்தனை பெண்ணை ஏமாற்றிக் கைகழுவி விட்டான்
உற்ற நண்பரெல்லாம் ஒதுங்கியே ஓடிடுவார்
பெண்ணிலே பேராசை கொண்டவன் வலையில்
சிக்கித் தவித்தாள் சின்னபெண் அவளோ ஏழை
பேதையை ஏமாற்றிய பாதகன்
பல பெண்களின் கணவன் என்றவள் அறிந்ததும் அலறித்துடித்தவள்
அதற்கொரு முடிவும் கொண்டாள்
நான்கு சுவருக்குள் அவன் போட்ட நாடகந்தனை நாட்டுமக்கள் விளங்கிட அதை அரங்கேற்ற எண்ணம் கொண்டாள் பெண்களை ஏமாற்றும் பித்தர்கள் கொட்டம் அடக்க ப
ஊருக்குள் அழகன் அவன்
அவன் உள்ளத்தை யாரிவார்
உறவுகளுக்கோ உத்தமனாம்
உள்ளதெல்லாம் யாரிவார்
அழகான பெண்ணைக் கண்டால்
ஆளைப் பிடிக்கத் தேவையில்லை
அத்தனை பெருமை சொல்வான் அவளிடம் அவனைப்பற்றி
இளமைக் காலமதில் எத்தனை பெண்ணை ஏமாற்றிக் கைகழுவி விட்டான்
உற்ற நண்பரெல்லாம் ஒதுங்கியே ஓடிடுவார்
பெண்ணிலே பேராசை கொண்டவன் வலையில்
சிக்கித் தவித்தாள் சின்னபெண் அவளோ ஏழை
பேதையை ஏமாற்றிய பாதகன்
பல பெண்களின் கணவன் என்றவள் அறிந்ததும் அலறித்துடித்தவள்
அதற்கொரு முடிவும் கொண்டாள்
நான்கு சுவருக்குள் அவன் போட்ட நாடகந்தனை நாட்டுமக்கள் விளங்கிட அதை அரங்கேற்ற எண்ணம் கொண்டாள் பெண்களை ஏமாற்றும் பித்தர்கள் கொட்டம் அடக்க ப
அத்தை இனி அன்னையடி
அதில் உனக்கு வேண்டாம் கலக்கமடி
அன்னை இனிப் பாடிடவா
ஆரிரரோ தாலாட்டு
மையிட்ட கண்ணிரெண்டை
மகளே நீ மெல்ல மூடு
கரும் சுருள் முடியைக் கொஞ்சம் கைகளால் கோதிடவோ?
சித்திரமே என் செங்கரும்பே
இரத்தினமே பசும் பொற்குடமே
பச்சை மரகதமே நீ பால் உண்டு நித்திரை செய் ஆராரோ பாடிடத்தான் உன் அத்தையும் பேராசை கொண்டாள்
பட்டே என் பனிமலரே அத்தைமடியில் நீ உறங்கு....
என் நினைவில்
என் மனதில்
என் உயிரில்
என் உணர்வில்
இனியெல்லாம் நீயே.......
உள்ளம் உருகுதடா கண்ணா
என் உள்ளம் உருகதடா
ஐஇரண்டு வருடங்கள்
அன்னை நானோ தவமிருந்தேன்
பட்டுப்போல் உன் மேனி தொட்டு
பளபளக்கும் பாதம் தொட்டு
கொஞ்சித் தீத்திடத்தான் கொள்ளை
ஆசை கொண்டேன்
உந்தன் வரவுக்காய் உள்ளம் ஏங்குடா
எந்தன் களி தீர்க்க எப்போ வந்து பிறப்பாய்
ஏங்கி தவிக்கும் அன்னை ஆசை உன்னை காணும் வரை
உன்னன்னை உயிர் வாழுமடா
வசீகர இதழ்கள் இனிக்கும் செங்கனி ஓடை
வண்டு விழிகள் துள்ளி யாடும் கயல் மேடை
வண்ண உடல் பூக்கூடை குணத்தில் அவள் காடை
வந்தாள் பேடை வழியெங்கும் வீசுது மலர் வாடை
வஞ்சி எண்ணம் நெஞ்சிலே வந்ததோ காதல் பீடை
அஷ்றப் அலி
வண்டுருளும் விழியழகி
வட்டநிலா முகவழகி
தண்டுவாழைக் கையழகி
தளிர்வெண்டை விரலழகி
குண்டுமல்லி மணம்வீசும்
கொடிமுல்லை உடலழகி
வாண்டுபோல் மனம்கொண்ட
வண்ணமலர்ச் சொண்டழகி
பெண்டிரும் உன்னெழிலை
பேசுகின்ற பேரழகி
கண்களினால் சம்மதத்தை
காட்டிவிட்டால் போதுமடி
காலமெல்லாம் உன்னைநான்
காப்பேனே என்கண்போலே
ஆக்கம்
அஷ்ரப் அலி
கூடை சிதறிய
செம்மலர் உடலில்
ஆடை போர்த்திய
வசீகரக் கடல்
மேடை வியக்கும்
கானக் குரலில்
அவள் மயக்கினாள்
ஜாடை மாடை யாய்
என்னை நோக்கிக்
கண் சிமிட்டினாள்
கோடை கொழுத்திய
உச்சி வெயிலில்
குளிர் விசிறிய
வாடைக் காற்று
வெறிச்சோடிய என்
மன வெளியில்
ஆழமாய் நட்டாள்
காதல் நாற்று
அஷ்ரப் அலி
உன் நினைவால் வாடும் உள்ளம்
உன் வரவை தேடும் தினம்
வண்ணவிழியோரம் வழிந்தோடும்
நீரருவி வைகையென பெருக்கெடுக்கும்
கண்ணாளன் உன் நலனை
எண்ணி கன்னிமனம் வாடுதையா
எங்குதான் நீ சென்றாலும்
எனை நீதான் மறந்தாலும்
உன் நலனை உள் மனது நாடுது பார்
நலம் அறிய ஆவல் கொண்டேன்
உனைக்காக்க இறையை தினம்
உருகி உருகி கேட்க்கின்றேன்
நிறைவான சுகத்துடன் நீடூழீ வாழுமையா.....,...