காதல் நாற்று
கூடை சிதறிய
செம்மலர் உடலில்
ஆடை போர்த்திய
வசீகரக் கடல்
மேடை வியக்கும்
கானக் குரலில்
அவள் மயக்கினாள்
ஜாடை மாடை யாய்
என்னை நோக்கிக்
கண் சிமிட்டினாள்
கோடை கொழுத்திய
உச்சி வெயிலில்
குளிர் விசிறிய
வாடைக் காற்று
வெறிச்சோடிய என்
மன வெளியில்
ஆழமாய் நட்டாள்
காதல் நாற்று
அஷ்ரப் அலி