காதல் வலி

இதயத்தின்
வலியை இமைகள் கூட அறிந்துவிடுமா என்ன??
கண்ணீர்துளிகள் சிந்து கையில்
கண் திறந்து விழிக்கிறது!

அவன் சிரிப்பிற்கு
பின் என் வலி இருப்பதே
அவன் அறியவில்லை என்னால் என்னவோ அதன் வலிகளில்
சிரிக்க முடியவில்லை....

வலிகள் கடந்து
என் காதல் சாகும் முன்
உன் முகம் பார்த்து
என் காதலை உன்னிடம் சொல்ல
என் இதயம் வலிக்கிறது....
துடிக்கிறது!!!

என் காதல் தோற்று
உன் காதல் ஜெயிக்கும் போது
உதட்டின் புன்னகையில்
கண்களில் ஈரத்தை பார்க்கிறது
என் இதயத்தின் வலி ....

நான்....
அவனிடம் சொல்ல நினைத்ததே
அவன் அவளிடம் சொல்லும் போது தோற்காமல் ஜெயித்து விடுகிறது அவனின் காதல்
என் காதல் வலிகளை கடந்து ...

கனவில் ...
நான் அவனிடம் பேசிய வார்த்தைகள் இன்று
அவன் அவளிடம் பேசும்போது ...
என் கனவுகள்
நினைவுகளாக மாறி விடுகிறது
என் நினைவுகளின் வலியில் ...

அவனுக்காக
நான் எழுதிய கவிதையை
அவன் ரசித்து விட் டு ஒரப் பார்வையில் அவன்
சிரிக்கும் போது விழுந்து விடுகிறது
என் மனம் மறுமுறை
அவனிடம்...

தொலைந்து போன
அவனிடம் தொலையாத
அவன் நினைவுகள் சொல்லும்
என் காதலின் வலியை ...

அவன்
என்னை பார்க்கையில்
எங்கோ பார்த்து பேசுகிறேன்
என் கண்ணில் உள்ள
அவன் முகத்தை
அவன் அறிந்து விடகூடாது என்பதற்காக...

அவனுக்காக
எழுதிய கவிதைகள்
இன்று என் நாட் குறிப்பில் நினைவுகளாக....

எவ்வளவு தூரத்தில்
அவன்இருந்தாலும்
ஏதோ ஒரு நொடியில்
என் நினைவு அவனுக்கு
என்னை பற்றி ஞாபகப்படுத்தும் என்ற என் நினைவுகளின்
நம்பிக்கையில்
அவன்நினைவில் நான்...

விடைபெறுகிறேன் என்றாய்
சென்றுவா என்றேன்
அப்போது தெரியவில்லை
உன் நினைவுகளை மட்டும் தந்து விட்டு என்னை விட்டுச் செல்வாய் என்று ... நானும் விடைபெறுகிறேன்
உன்னுடன் அல்ல....
உன்நினைவுகளுடன் ...
இந்த கவிதையின் வரிகளில்....

#என்னவனே

எழுதியவர் : அமுது (10-Jun-18, 2:45 pm)
சேர்த்தது : அமுது உன்னவள்
Tanglish : kaadhal vali
பார்வை : 175

மேலே