காதல்-இதயங்கள் பரிவர்த்தனை

ஒரே ஒரு பார்வையால்
முதல் பார்வையால்
சேர்ந்தோம் நானும்,அவளும்
அந்த பார்வையின் சக்தியை
எப்படிச்சொல்வேன் -என்னை
அறியாமல் என் இதயம்
அவன் வசமானது-அவனறியாமல்
அவன் இதயம் என் வசமானது
ஜாதகத்தில் கிரகங்கள் பரிவர்த்தனை
காதலில் எங்கள் முதல் பார்வை
தந்தது இந்த 'காதல் பரிவர்த்தனை'
அவன் இதயம் என்னிடமும்,என்
இதயம் அவனிடமும் -அவன் நானாக
நான் அவனாக , என்று எங்கள்
இதயங்கள் ஒன்றாக -கிரகங்கள்
பரிவர்த்தனையில் சுக யோகமுண்டு
இந்த இதயங்கள் பரிவர்த்தனையில்
காதல் யோகம் வந்தது -நாங்கள்
காதலர்கள் ,அவள் இதயம்,என் இதயம்
என்று இல்லாமல் எங்கள் இதயமாய்
பரிவர்த்தனையில் இணைந்த 'காதலர்கள்.'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Jun-18, 12:34 pm)
பார்வை : 51

மேலே