நினைவுகளால் வாழ்கிறவன்

வாகன நெருக்கடியற்ற
நிசப்த சாலையில்
நினைவுகளால்
நடந்து கொண்டிருந்தேன்....

எப்பொழுதும் தீராத
எனது காதல்
ஒவ்வொரு மாலையும்
என்னோடு தேனீர் அருந்திக்கொண்டிருக்கிறது

நான் காதலிக்க
தகுதியற்றவன்.
ஆனால்
நினைவுகளால் வாழ்கிறவன்.

இன்று போய்
நாளை வருவதாக
மரணம் எனை
துரத்துகிறது..

நான் வாழ விரும்புகிறேன்
உனது
நினைவுகளால்
வாழ்கிறவன்

எழுதியவர் : கோபிரியன் (10-Jun-18, 9:14 am)
சேர்த்தது : கோபிரியன்
பார்வை : 188

மேலே