கோபக் கிளியே

நிஜங்களையும் நிழலாக
எண்ணுகிறது
என் மனது....

செவ்வானம் சேலை
கட்டியது போல்
தோன்றுகிறது....

சிவந்த கண்கள்
கொண்ட உன்
கோபம்...
எனக்கு
புன்னகையாக
தெரிகிறது.....

உன் சினம்
எல்லாம்
சித்திரமாக
மாறுகிறது.....

உன் வார்த்தைகளை
உருக்கி ஒரு
வாகனம்
செய்வேன் அன்பே ...
நீயும்
நானும்
நிலாவை உலா
வருவதற்கு ...

கோபக் கிளியே
மலையில் நனையாத
மார்கழி வெயிலே....

உன் உதட்டில்
இருந்து உதிரும்
முத்துக்களை
காதல் என்ற
நூலில் கோர்த்து
உன் கழுத்தில்
மாலையாக போடுவேன்....

என் மடியில்
உன்னை
தூங்க வைப்பேன்...
மாலையிட்டு
உன்னை மணப்பேன்........

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (10-Jun-18, 8:38 am)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
பார்வை : 1032

மேலே