காத்துகிடக்கிறேன்

சூரியன் கூட
நிலவாக மாறிவிட்டது......
மாலை நேரத்தில்
நீ மாடியில் உலா
வருவதை காண்பதற்கு....

பிரிந்து கிடந்த
மேகங்கள் கூட
ஒன்றாய் சேர்ந்து
கதிரவனை சேர்ந்தது......
சூரியனை காணும்
நேரத்தில் அதையும்
காண்பாய் என்று......

கூச்சலிட்டுக் கொண்டு
வந்த பறவை கூட்டமெல்லாம்
உன் சுவாச காற்று பட்டவுடன்
சாந்தமாகி அங்கேயே
அமர்ந்து விட்டது......

அயராது உழைக்கும்
எறும்புகள் கூட
ஓய்வு எடுத்தது
நத்தை போல
நீ ஊர்ந்து நடப்பதை
பார்பதற்கு.....

கிழக்கே வீசிய
காற்று கூட
சிறிது நேரம்
திசையை திருப்பி
உன் கூந்தலை
வருடி போனது ......

நீ மாடியில் நடப்பதை
பார்த்து மண் கூட
ஏக்கம் கொண்டது
உன் பாதம்
அதன் மேல் படாத என்று .....
கீழே இறங்கி வாடி
காத்துக் கிடப்பது
மண் மட்டுமல்ல.....

உன்னை மட்டுமே
கண்ணுக்குள் வைத்து
இமை பொழுதும்
உறக்கமின்றி
உன்னையே நினைத்து
கொண்டிருக்கும்
உன்னை கரம் பிடிக்க
காத்துக்கொண்டிருக்கும்
உன்னால் காதலில்
விழுந்த உன்
காதலன் நானும் தான்..........

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (10-Jun-18, 8:18 am)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
பார்வை : 132

மேலே