சொல்லாமல் சென்றதென்ன

காலையில் இருந்து
நீ வருவாய் என்று
காத்திருந்து கண்களும்
பூத்துவிட்டது கண்ணீராலே........

உடலில் பத்தில் ஒரு பங்குதான்
இதயத்தின் எடை
ஆனால்...,
பத்து பங்கையும்
இயக்குவது இதயம்
அந்த இதயத்தையும்
இயக்குவது காதல்
என் இதயம் இயங்குவதற்கும்
காரணம் நீ தன்...........!
இப்பொழுது என்
இதயம் இல்லாமல் போனதற்கும்
காரணம் நீ தான் ........!

விழிகளின் ஓரம்
வித்தியாசமான ஒரு உணர்வு
என்னவென்று தொட்டு பார்த்தேன்
அது கண்ணீரின் ஈரம்........!
இதுவரை என் கண்களுக்குள்ளே
கட்டுப்பாட்டோடு இருந்த கண்ணீர்
வெளிவருவதற்கு காரணம் நீ தான்.....!

சொல்லாமலே போனதென்ன மானே
சொன்னால் உன்னுடனே
நான் வந்துவிடுவேன் என்றோ....!
சித்திரம் மாதம் போல்
எந்த மாதமும் சூரியன்
சிரிப்பதில்லை ............
நீ இல்லாத எந்த நேரமும்
நானும் சிரிப்பதில்லை ..........

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (10-Jun-18, 8:05 am)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
பார்வை : 35

மேலே