கோபிரியன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கோபிரியன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  26-May-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Aug-2014
பார்த்தவர்கள்:  158
புள்ளி:  44

என்னைப் பற்றி...

க. கோபாலகிருஷ்ணன்
சொந்த ஊர் : கழுகுமலை (தூத்துகுடி மாவட்டம் )rnநான் இளங்கலை மின்ணணுதுறை பட்டதாரி. தற்போது வெளிநாட்டு நிறுவனமொன்றில் தகவல் ஆய்வாளராக பணிபுரிந்துகொண்டிருக்கிறேன் .

என் படைப்புகள்
கோபிரியன் செய்திகள்
கோபிரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2019 12:57 pm

உலகிலேயே மிக
நீளமான அழகு
நீ சாப்பிடும்
ஐஸ்கிரீம் தான்

அன்புள்ள சகி,

உனது ecoவையும்
எனது Ecoவையும்
கலக்கி
புது ஐஸ்கிரீம்
செய்வோம்.

காதல்
ஐஸ்கிரீம்களாக
உருகி ஓடுகையில்
நமது பிரிவு
குளிர்ச்சியாகி விடும்.

மேலும்

கோபிரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2019 9:17 am

நாங்கள் யாரிடமும்
சொல்லிக் கொள்ளாமல்
கிளம்புகிறோம்.

போதையில் மிதக்கும்
பெரும் குடிகாரனாக
இந்த நகரம்
போய் கொண்டிருக்கிறது.

உணவை சேமிக்கும்
எறும்பு கூட்டத்தைப் போல
நாங்கள்
காணாமல் போகிறோம்..

ஆயிரம் மிருகங்கள்
எலும்பு சதைகளோடு
எங்களை
வாயில் கவ்விக்கொண்டு
ஓடிக் கொண்டிருக்கின்றன...

பகல் தொடங்கி
இரவில் முடியும்
ஈசலை போல
நாங்கள் மறைந்து போகிறோம்..

கசங்கிய குப்பையாக
எங்களை
ஆயிரம் கைகள்
தூக்கி எறிகின்றன...

நாங்கள்
நிராதரவற்றவர்கள் ;

உங்களின்
யாருக்கேனும்
மனசாட்சியிலிருந்தால்
நாங்கள் போய்விட்ட பிறகான
பாதையில்
விதைகளை தூவுங்கள்...

மேலும்

கோபிரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2019 2:07 pm

தீடீரென்று
பச்சை நிற
கனவுகள் வருவதாக
தோன்றுகையில்
நான் யாரிடம் கேட்பது

தினமும்
பிரமிப்பின் படகில்
மிதந்து கொண்டிருக்கிறேன்..

நான்காம் நாள் கனவில்...
இரவின் நதிக்கரையில்
நின்ற படி
என்னை காதலிப்பதாக
சொன்னாய்....

வெந்தீர் குமிழ்களாக
பின் எங்கே
சென்று மறைந்தாய்...

அடங்காத காதலோடு
பச்சை கனவுகளில்
மான்களை போல
நினைவுகளை
துரத்திக்கொண்டு
ஓடிக்கொண்டிருக்கிறேன்...

வெறி பிடித்த
காதல் மிருகம் நான்.... !

மேலும்

காதல் என்பது கண்டு கவர்ந்து கேட்டு இணைவது இதில் வெறி வரலாமோ? கவி புனைவு அருமை. 04-Feb-2019 8:12 am
கோபிரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2018 5:13 am

பனி பெய்யும்
இரவுகளை
மெதுவாகவே கடந்து செல்கிறது
நீ சென்ற பிறகான
மௌனம்
அன்புள்ள சகி,
இன்றைக்கும் நினைவுகளுக்கு
விடுமுறை இல்லை

மேலும்

கோபிரியன் - கோபிரியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Oct-2017 6:18 am

ஓம்
முருகானந்தம் பவ....!
என்னோடு கலந்து
உடலாகி
உயிராகி
அன்பாகி
காதலாகி
சந்தோஷமும் துக்கமுமானவனே
கந்தா போற்றி...!

அன்பு காட்ட தெரியாத
மனிதர்கள் நாங்கள்...!

எங்கள் இதயத்தில்
அன்பாகி
அழியாத பிரக்ஜையாகி
வாழ்வை காப்பாயாக...!

ஓம் விவசாயம் வளர்க
அரசியல் பிரச்சினை தீர்க்க
நீட் பிரச்சினை தீர்க்க
கல்வியறிவு வளர்க
தீவிரவாதம் தீர்க்க
GST வேண்டாமாக
மீண்டும் ஒரு அப்துல்கலாம் வேண்டுமாக
இந்தியா மேம்பட
உலகம் சாந்தமாகி
அமைதியும் அன்புமாக

ஓம் முருகானந்த சரணம்

மேலும்

நன்றி தோழரே 26-Oct-2017 4:25 am
எண்ணங்கள் சீர் கெட்டதால் வாழ்க்கையும் சுவடை விட்டு தடுமாறிப்போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Oct-2017 11:57 am
கார்த்திக் நிலா ரசிகன் அளித்த படைப்பில் (public) prasanth 7 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Oct-2017 11:20 am

உடலை விட்டு
உயிர் பிரிந்து சென்றும்
வாழ்கிறேன் !!!
என்னவளே!
உயிராய் நீ இருக்க
வெரும் உடலாய் நான்!!!

மேலும்

இது எனது இதயத்தின் வரிகள் ......அருமையான படிமத்தை கவியாக்கி தந்த தோழருக்கு வாழ்த்துக்கள் 24-Oct-2017 4:55 am
உயிர் என்பது உடலில் கலந்தவை மட்டும் அல்ல. அவை அவர்களின் நினைவு நம்மிடம் உள்ளவரை உணர்வுகளில் கலந்திருக்கும்! மேலும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 23-Oct-2017 11:23 pm
மிக்க நன்றி தோழரே !! 23-Oct-2017 11:33 am
ஏக்கத்தின் விளிம்பில் துவண்டு போகிறது காதல் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Oct-2017 11:29 am
கோபிரியன் - பொன்னம்பலம் குலேந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Oct-2017 1:48 am

இலங்கையின் கிழக்கு பகுதியில் உள்ள எரி சார்ந்த ஊர் மட்டக்களப்பு. பாடு மீன் வாவி என்பர். தவளைகள் மாரி காலத்தில் தாளவாத்தியக் கச்சேரி இசைப்பது போல் கல்லடி பலத்தின் கீழ் ஊரிகள் பூரண சந்திரன் காலத்தில் இசை பாடும். சிலர் அவ்விசை கடல் கன்னிகள் காதலர்களை அழைக்கப் பாடும் இசை என்பர். அவ்வூருக்கு பெயர் தொன்றியது பற்றி மட்டகளப்பு மான்மியம் என்ற நூலில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளாளர். முக்குவர் கிழக்கு ’’ இலங்கை மேல் படை எடுத்த போது ஒரு சதுப்பு ஏரி காணப்பட்டது. அதில் தமது ஓடத்தை செலுத்தி சென்றபோது ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மேல் தோணியில் போகமுடியாமல் சேறு இருந்ததால் இது “மட்டும் தானடா” என்றனராம். இதனால் இப்

மேலும்

அறத்தொடு வாழும் மனிதனின் மனம் என்றுமே அன்பாலும் உண்மையாலும் நிறைந்திருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. நேர்மை ஒருவகையான அறம்தான். உலகத்தில் உண்மையையும் அறத்தையும் காப்பாற்றிக்கொண்டிருக்கும் வரதன் போன்றோர்கள் அசாதாரணமாக இருக்கிறார்கள். ஒவ்வோர் மனிதனுக்குள்ளுமாக ஒரு வரதன் இருப்பதும் உண்மைதான். ஆனால் வறுமை, சூழ்நிலை, பணத்தின் மீது கொண்ட வெறி போன்றவைகள் மனிதனின் மனதிலுள்ள வரதனை மனதிற்குள்ளேயே புதைத்துவிடுகின்றன. கதை நன்றாக உள்ளது. வரதன் என்கிற கதாபாத்திரம் மனதை அழுத்துகிறது. மனசாட்சியை தட்டி எழுப்புகிறது 21-Oct-2017 4:17 pm
ஒரு மனிதனின் நேர்மை ஆரம்பத்தில் வாழ்க்கையை ஏழ்மையால் சோதித்தாலும் ஒரு நாள் வசந்தமாய் அவர்களை மாற்றி விடும் என்ற தத்துவத்தை நிரூபிக்கும் கதையோட்டம். மதங்கள் நிறங்கள் என்று வர்க்கம் பிரிக்கும் இன்றைய கூட்டத்திற்கு மத்தியில் பணத்தை விரும்பாதவன் யார் இருக்கான் என்று தான் நினைக்கச் செய்கிறது. பணத்தை வைத்தே மனிதனை அளவிடும் இந்த உலகில் எளிமையாக வாழ்வதன் மூலமும் நேர்மையான ஊழியம் மூலமும் ஒரு கூட்டம் தொய்வின்றி வாழ்க்கையை நடாத்திக்கொண்ட இருக்கிறது. அறிமுகம் இல்லாத மனிதனிடம் இருந்தும் கிடைக்கும் அன்பு சில நாட்களில் பெரும் நேசமாய் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிறது. ஒரு தாயின் கண்ணீரில் குடும்பத்தின் விளக்குகள் அணைந்தும் அணையாமலும் திக்கி திக்கி ஒளிமயம் வீசிக்கொண்டிருந்தது ஒரு நல்ல பிள்ளையின் உழைப்பால் ஆனந்தமும் கண்களில் கண்ணீர் மழைதூவுகிறது. கிடைத்ததை வைத்து திருப்தி அடைகின்ற மனம் எப்போதும் வாழ்க்கையில் துன்பத்தை ஒரு கட்டத்திற்கு பின் அனுபவிக்காது என்ற எண்ணத்தை அற்புதமாக சொல்கிறது கதை. மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கும் எனக்கு கூட அதன் வரலாறுகள் தெரியாது ஆனால் ஒரு பயணியாய் வருகை புரிந்த நீங்கள் ஆத்மார்த்தமாக கதைக்குள் நிகழ்வுகளை செதுக்கி உள்ளீர்கள் 21-Oct-2017 2:22 pm
படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 21-Oct-2017 5:00 am
வாழ்க்கைப் பயணம் வாழ்க்கை வாழ்வதற்கே ! கடமை கண்ணியம் கட்டுப்பாடு முதலில் கதை படித்ததும் உங்கள் ஞாபகம் தான் வந்தது கதையைப் படிக்கும் ஆர்வத்தில் கதை எழுதியவர் யார் எனப் பார்த்து பாராட்ட நினைத்தேன் கடைசியில் பார்த்தால் அதிர்ச்சி ! பொன் குலேந்திரன் அவர்கள் எழுத்து குடும்பத்தாருக்கு அளித்த தீபாவளி பரிசு போலும் 21-Oct-2017 4:59 am
யாழினி வளன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Oct-2017 12:14 pm

உன்னிடம் பேச மட்டும்
எப்போதும் ஆயிரம் கதைகள் இருக்கிறது
உன்னிடம் வீச மட்டும்
என்னுடைய வாசம் தவம் கிடக்கிறது

உன்னுடைய நேசம் மட்டும்
என்னிதய வாசலுக்குள் உறங்கி கொண்டிருக்கிறது
உன்னுடைய பாசம் மட்டும்
எனக்குள் ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் பிரசவிக்கிறது

உன்னுடைய உருவம் மட்டும்
எங்கேயும் போகாமல் ஒட்டிக் கொள்கிறது
உன்னுடைய நினைப்பு மட்டும்
என்னிதயத்த நீங்காமல் நிரப்பி இருக்கிறது

உன்னுடைய நிகழ்காலத்தோடு தான்
என்னுடைய நிகழ்காலம் கெட்டியாக ஒட்டிக் கொள்கிறது
உன்னுடைய எதிர்காலத்தோடு தான்
என்னுடைய காலடி தடங்கள் இணைந்திட நினைக்கிறது

என்னையும் உன்னையும்
அந்த கால ச

மேலும்

நன்றி ஒருவேளை உணர்வுகள் ஒளிந்து கொள்வதால் இப்படி இருக்கலாம் .. கருத்துக்கு நன்றி 23-Oct-2017 3:59 am
சில காதல் ஏக்கத்தில் துவங்கி துக்கத்தில் முடிகிறது சில காதல் ஏக்கத்தில் துவங்கி இன்பத்தில் முடிகிறது எல்லாம் காலம் செய்யும் கோலம்... 21-Oct-2017 10:26 am
உன்னுடைய நேசம் மட்டும் என்னிதய வாசலுக்குள் உறங்கி கொண்டிருக்கிறது உன்னுடைய பாசம் மட்டும் எனக்குள் ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் பிரசவிக்கிறது இந்த வரிகள் மிகவும் ஏன் மனதிற்கு நெருங்கி விட்டன. வாழ்வை அர்த்தமுடன் வைத்திருப்பது காதலும் அன்பும்தான். அந்த அன்பில் பிரிவும் சேரவும் கலந்ததுதான் வாழ்க்கை. அதை சரியாக புரிந்துகொள்வதில்தான் நமது மனமும் தடுமாறுகிறது. அருமையான படிமம். இருந்தாலும் ஒரு விமர்சனம் என்னவெனில் காதலும் உணர்வும் ஒன்றுதான் அதைகைய அன்பை செல்லுகையில் இன்னும் யதார்த்தமாக உணர்வுகளை நேரிடையாக சொல்லியிருந்திருக்கலாம். 21-Oct-2017 4:44 am
இதுவரை போக முடிகிறதோ அதுவரை தான் வாழ்க்கை என்பார்கள். அந்த வாழ்க்கையிலும் ஓர் அங்கம் காதல். அந்த அங்கத்தின் சுவாசம் இன்றி எந்தவொரு ஜீவனின் வாழ்க்கையும் ஒரு அடி கூட நகராது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Oct-2017 12:17 am
கோபிரியன் - கோபிரியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Sep-2017 8:40 am

நமது வீட்டின்
முகவரியை
யாரோ தீர்மானிக்கிறார்கள்....!
நான் யாருமற்றவன் ....!

இலக்கில்லாத பயணத்தில்
பேருந்து கிடைக்காமல்
அலைகிறேன்
எப்படியும் இன்று ஆபிஸிற்கு
தாமதமாகிவிடும் ....!


தினமும் ஆயிரம்
வண்ணங்களுடன்
என்னுடனான மனிதர்கள்
ஆயினும்
எனது சிகரெட்
புகையின் நிறம்
வெண்மைதான்..

வெதுவெதுப்பான
மதியநேரக்காற்றில்
காமத்தை தேடி
வெறிபிடித்து அலைகின்றன
சில கொம்பு முளைத்த நாய்கள்.

எச்சில் ஒழுக
என்னை பார்த்து இரைகின்றன....
இது கலாச்சார வீதிதான்
ஆனாலும் எங்கும் நாற்றம்...

உலகத்தின் பிரமாண்ட
ஆச்சர்யமாக
ஒரு காலையில்
வானிலிருந்து வந்திறங்கும்
வெள்ள

மேலும்

தங்களது வாழ்த்திற்கு நன்றி நண்பரே....! 20-Oct-2017 12:07 am
இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் சூழ்நிலைக் கைதிகள் தான். காலம் போடுகின்ற கட்டளைகளை இதயங்கள் கேட்டு நடக்கிறது ஆனால் இதயத்தின் கட்டளைகளை காலம் கேட்டு நடப்பதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Sep-2017 9:56 am
கோபிரியன் - கோபிரியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Aug-2017 8:29 pm

பசித்துக்
கொண்டிருக்கையில்
அகராதியில்லாத
அன்பை
தேடிக்கொண்டிருந்தேன்
நீயற்ற தேசத்தில்

நெடுநேரம் பார்த்தும்
சலிக்காமல்
உன் முகம்.
நீ அழகா? இயல்பாயிருக்கிறாயா?
தெரியாது.

வாழ்வின் சுகங்களையும்
சந்தோஷத்தையும்
இழந்துவிட்டிருந்தேன்
நான்
உன்னை சந்திக்கும்
நாள் முன்பு வரை

பிரியும் நாளைத்தவிர
தினம் தினம்
பிரிந்துகொண்டிருந்தேன்
உன்னிடம்

மழைக்குபின்
வெயிலாக
ஒன்று சேர்ந்தோம்
ஆபிசில்
நீயும் நானும்

நீ ரம்யமானவள் ;

சொல்லமுடியாத
துயரமும் பகிரமுடிய
வேதனையும் கொண்ட
உனக்கு மறுபடியும்
ஒரு புதுசோதனை
நான் காதலை சொன்னது

மரண நீதிமன்றத்தில்
குற

மேலும்

அருமை சகோ 28-Aug-2017 12:22 pm
அவளுக்குள் தொலைந்த பின் இதயமும் அவளது சர்வாதிகாரத்தில் சிக்கிக் கொள்கிறது 28-Aug-2017 1:52 am
கோபிரியன் - கோபிரியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Apr-2017 10:36 pm

மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு
இமைபோல நான் பார்க்க
கனவாய் நீ மாறிடு....!

மயில்தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல்
நிகழும்...!

விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்ந்தேன்
கடலாக கண் அனேதே...!

மேலும்

கோபிரியன் - கோபிரியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Apr-2017 12:47 pm

சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சின் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களாய் நிரப்பிட
வா பெண்ணே .....!

காற்றின் எந்தன் கைகள் இரண்டும்
உன்னை அன்றி யாரை தேடும்
விலகி செல்லாதே
தொலைந்துபோனேனே நான்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
Karthikeyan

Karthikeyan

கழுகுமலை (தூத்துக்குடி மா

இவர் பின்தொடர்பவர்கள் (8)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே