எனது கவிதையின் தலைப்பு நீதான்
பசித்துக்
கொண்டிருக்கையில்
அகராதியில்லாத
அன்பை
தேடிக்கொண்டிருந்தேன்
நீயற்ற தேசத்தில்
நெடுநேரம் பார்த்தும்
சலிக்காமல்
உன் முகம்.
நீ அழகா? இயல்பாயிருக்கிறாயா?
தெரியாது.
வாழ்வின் சுகங்களையும்
சந்தோஷத்தையும்
இழந்துவிட்டிருந்தேன்
நான்
உன்னை சந்திக்கும்
நாள் முன்பு வரை
பிரியும் நாளைத்தவிர
தினம் தினம்
பிரிந்துகொண்டிருந்தேன்
உன்னிடம்
மழைக்குபின்
வெயிலாக
ஒன்று சேர்ந்தோம்
ஆபிசில்
நீயும் நானும்
நீ ரம்யமானவள் ;
சொல்லமுடியாத
துயரமும் பகிரமுடிய
வேதனையும் கொண்ட
உனக்கு மறுபடியும்
ஒரு புதுசோதனை
நான் காதலை சொன்னது
மரண நீதிமன்றத்தில்
குற்றவிசாரணை
நிரபராதி நீ குற்றவாளி நான்
சாட்சியாக வாழ்க்கை
பெரிய ஆச்சர்யம்
நீயே ஜாமீனும்
எடுத்துவிடுகிறாய் என்னை
குடும்பத்தை பிரிந்தவன்
காதலித்தாலும்
அனாதைதான்
அன்பாக மட்டுமே
நீ என்னுடன்
உனக்கு பிடிக்காதது
எனது காதல் வார்த்தைகள்
பிடித்தது
அன்பாக பேசி சிரிக்கவைப்பது
பிரிந்துவிட்டோம்
உடலளவில் என்றோ ?
ஒரு நாள் நீ
பரிசளித்த கடிகாரம்
ஊமையாக நகர்கிறது
நான்தான் அதோடு
பேசிக்கொண்டிருக்கிறேன்
மௌனமாக இக்கவிதையை
முடிக்க விரும்பவில்லை
நான்
தினம் ஆயிரமிரவுகள்
தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பேன்
உன் மனதில்
வார்த்தைகள்
மட்டும் என் மனதில்
இப்படிக்கு
பெண்களை புரிந்துகொள்ளமுடிய
பெண்ணியவாதி..........!