கோபிரியன்- கருத்துகள்

இது எனது இதயத்தின் வரிகள் ......அருமையான படிமத்தை கவியாக்கி தந்த தோழருக்கு வாழ்த்துக்கள்

அறத்தொடு வாழும் மனிதனின் மனம் என்றுமே அன்பாலும் உண்மையாலும் நிறைந்திருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. நேர்மை ஒருவகையான அறம்தான். உலகத்தில் உண்மையையும் அறத்தையும் காப்பாற்றிக்கொண்டிருக்கும் வரதன் போன்றோர்கள் அசாதாரணமாக இருக்கிறார்கள். ஒவ்வோர் மனிதனுக்குள்ளுமாக ஒரு வரதன் இருப்பதும் உண்மைதான். ஆனால் வறுமை, சூழ்நிலை, பணத்தின் மீது கொண்ட வெறி போன்றவைகள் மனிதனின் மனதிலுள்ள வரதனை மனதிற்குள்ளேயே புதைத்துவிடுகின்றன. கதை நன்றாக உள்ளது. வரதன் என்கிற கதாபாத்திரம் மனதை அழுத்துகிறது. மனசாட்சியை தட்டி எழுப்புகிறது

உன்னுடைய நேசம் மட்டும்
என்னிதய வாசலுக்குள் உறங்கி கொண்டிருக்கிறது
உன்னுடைய பாசம் மட்டும்
எனக்குள் ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் பிரசவிக்கிறது இந்த வரிகள் மிகவும் ஏன் மனதிற்கு நெருங்கி விட்டன. வாழ்வை அர்த்தமுடன் வைத்திருப்பது காதலும் அன்பும்தான். அந்த அன்பில் பிரிவும் சேரவும் கலந்ததுதான் வாழ்க்கை. அதை சரியாக புரிந்துகொள்வதில்தான் நமது மனமும் தடுமாறுகிறது. அருமையான படிமம். இருந்தாலும் ஒரு விமர்சனம் என்னவெனில் காதலும் உணர்வும் ஒன்றுதான் அதைகைய அன்பை செல்லுகையில் இன்னும் யதார்த்தமாக உணர்வுகளை நேரிடையாக சொல்லியிருந்திருக்கலாம்.

கண்ணீரை துடைப்பதற்கு விரல்கள் வேண்டும் என்கிற படிமம் ஒரே வரியில் பொருந்தியுள்ளது

இதயம் காதலால் நிரப்புவதை போல துக்கத்தால் மேலும் பீடிக்கப்பட்டிருக்கிறது.. கவிதைகள் உணர்வுகளின் வெளிப்பாடு. இதயத்தில் காதலும் தூய அன்பும் இருந்தால் நாம் பேசும் வார்த்தைகள் அனைத்தும் கவிதைதான் கவிதை உணர்வுகளை பேசுகிறது அருமை நண்பரே ...

மகிழ்ச்சியும் அதன் எதிர்மறைவான வருத்தமமும் வாழ்வின் இரு பக்கங்கள் அதனை ஒரு நாணயத்தை சுழற்றுவதை போல சொல்லவிட்டிர்கள் நண்பரே அருமை .....!

காதல் ரகசியமானது ஒருவர் மீதான ரகசியம் என்பது உரிமைகொண்டாடுவதிலிருக்கிறது. அந்த உரிமை புரிதல் மற்றும் அன்பிலிருந்து வெளிப்படுகிறது. இரண்டுவரிகளில் ஒரு யுகத்து காதல் வரிகளை தந்திருப்பது அருமை நண்பரே ....!

என் இரவுகள்
உன் நினைவுகளோடே முடிகிறது
என் சிறகுகள்
உன்னை சுமந்திடவே துடிக்கிறது

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

கவிதை இன்னும் நீண்டு பேசியிருக்கலாமென தோன்றுகிறது .

மகாகவி பாரதியார், அப்துல் ரகுமான், பழனி பாரதி, மனுஷ்ய புத்திரன் கவிதைகள் நன்றாக இருக்கும்

உலகில் எந்தவித காதலும் தராத வழியும் வேதனை தந்தையின் மறைவுதான். ஒரு பெண்ணின் வாழ்வில் அவளுடைய ஒருவித துணையாக தந்தையின் தேவை மிகவும் அவசியமானது. பிரிவு என்பது மட்டும்தான் அன்பினை காப்பாற்றி வைக்கும் ஒரு உணர்வு. பிரிவினை ஏற்றுக்கொள்ளும் மனம் உண்மையான அன்பாகிறது. மறைந்த உறவுகள் என்றுமே நினைவுகளை கவிதைகளாக உருமாற்றிக்கொள்ளுகிறது . அருமை வாழ்த்துக்கள் இன்னும் எழுதுங்கள் .....தோழி

தங்களது வாழ்த்திற்கு நன்றி நண்பரே....!

தங்களுடைய கருத்திற்கு நன்றி தோழரே....!


கோபிரியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே