எறும்புகளின் தேசம்

இரண்டு எறும்புகள் இரவு சாப்பாட்டினை முடித்துவிட்டு காற்றுவாங்கிக்கொண்டிருந்தன.

"அரசியலைப்பற்றி என்ன நினைக்கிறாய்?" என்று ஒரு எறும்பு மற்றொரு எறும்பிடம் கேட்டது.

"அரசியல் என்பது சுயநலமாகிவிட்டது" என்றது அந்த எறும்பு.

"சரி காதல் என்பது என்ன?"

"காதல் அதன் புனிதத்தை இழந்துவிட்டது" என்றது.

"கொள்கையை பற்றி என்ன நினைகிறாய்" என்று கொட்டாவி விட்டபடியே கேட்டது எறும்பு.

"நீ விடுகிற கொட்டாவியைப்போலத்தான் கொள்கையும் அதை விடாமல் இருக்க முடியாது" என்றவுடன் அதற்கும் கொட்டாவி வந்துவிட்டது.

"சரி கடவுளை பற்றி என்ன நினைக்கிறாய்?" என்று வினவியது.

" நான் கடவுள் நீயும் கடவுள்" என்று புன்னைகையோடு பதில் கூறியது.

"எப்படி"

"கடவுளைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் நாம் அதனால்"

கடைசி கேள்வி : " வாழ்க்கை என்பதென்ன? என்றது.


அப்பொழுது பக்கத்து ஊர் பெரிய கட்டெறும்புகள் சிற்றெம்புகளின் இடத்தை ஆக்கிரமித்தன.

இதுவரை கேள்வி கேட்டுக்கொண்டிருந்த சிற்றெறும்பு கட்டெறும்புகளிடம் பதில் சொன்ன சிற்றெறும்பினை காட்டி கொடுத்தது. அந்த எறும்புதான் சிற்றெறும்புகளின் தலைவர். அதனை கொன்றுவிட்டால் அதன் இனத்தையே அபகரித்துவிடலாம்.

போர்தொடுத்து கள்ளத்தனமாக வந்த கட்டெறும்புகள் அந்த தலைமை எறும்பினை கத்தியால் குத்தி வீழ்த்தினார்கள்.

இறக்கும்தருவாயில் அந்த தலைமை எறும்பிடம் கேட்டது கேள்வி கேட்ட எறும்பு: சொல்லு வாழ்க்கை என்பதென்ன"

" நீ என்னை கட்டிக்கொடுத்தாயே அதன் வாழ்வு" என்றபடியே உயிரைவிட்டது அந்த எறும்பு.

கேள்வி கேட்ட எறும்பிற்கு புரியவில்லை. அது புரியாமல் மண்டையை போட்டு குழப்பியது.

"எனக்கு புரியவில்லை சொல்லிவிட்டு செத்துப்போ இல்லையெனில் ஏன் மண்டை வெடித்துவிடும்"

என்றது. ஆனால் உயிரிழந்த எறும்பிடம் எந்தவித சலனமுமில்லை.

நெடும் நாட்களுக்குப்பின்னர் எனது புத்தக மேசையின் மீது தலை சொரிந்தபடி ஒரு எறும்பு ஓடிக்கொண்டிருந்தது.

அந்த எறும்பினை வெறித்தது பார்த்துக்கொண்டிருந்தேன். குழம்பிப்போய் கண்ணாடியில் ஏன் முகத்தைப்பார்த்தேன்.

ஒருவேளை அந்த எறும்பு நான்தானோ? என்று தோன்றியது.


பலவருடங்களுக்கு பின்பு எனது வெளிநாட்டு நண்பனும் அந்த எறும்பினை பார்த்துவிட்டதாக சொன்னான். அதிலிருந்து அவனுக்கும் குழப்பம் வந்துவிட்டதாக சொன்னான்.

கண்களை மூடி யோசித்துக்கொண்டிருந்தேன். அந்த எறும்பு மனதில் உலறியபடி அலைந்துகொண்டிருந்தது.

எழுதியவர் : கோபிரியன் (19-Oct-17, 8:18 pm)
Tanglish : erumbugalin dhesam
பார்வை : 289

மேலே