அவள் இன்றி அவன்

அவளை கண்டு கண்களில் வெள்ளம் பாய துடித்து நின்றிருந்தான் அவன், ஆம் நெடு நாட்கள் அவளை காணாமல் அவளின் இனிய குரல் கேட்காமல் நடைபிணமாய் அலைந்து வாழ்க்கை போன போக்கிலே சென்று கொண்டிருந்தான். அவளை காதல் செய்து ஒட்டி உறவாடிய தருணங்கள் எல்லாம் அவனை வாட்டி வதைத்தன,
அவளை பிரிந்து இன்னோருத்தியை மணந்து இவன் எப்படியோ வாழ்க்கை தொடங்கிவிட்டான். அவனுடைய சூழ்நிலை அப்படி செய்ய வைத்தது ஜாதி என்றும் சமூகம் என்றும் குடும்பம் என்றும் எல்லாமும் சேர்ந்து மூன்று முடிச்சை இனோருத்தி கழுத்தில் சேர வைத்தது. அதன் பின்பு அவளை காணவும் முடியாமல் குரல் கேட்காமல் அவள் அவனுக்காக பாடும் பாடல் கேளாமல் செல்லமாய் திட்டுகள் வாங்காமல் நாட்கள் ரணமாய் ஓடின., அவளை நினைத்து அவன் இன்னமும் அவள் சொன்ன வார்த்தைகளை காப்பாற்றி கொண்டிருந்தான். இருவரும் சந்தித்த இடங்களுக்கு இவன் தனிமையில் சென்று நினைவுகளில் வாழ தொடங்கினான்., அந்த நாள் மட்டும் அப்படி செல்லவில்லை சாலை நடுவிலே கடக்கும் ஒரு பெண்ணை கண்டான், அவள் கடக்கும் அவசரத்தில் நிலை தடுமாறி விழுந்தாள். சட்டென இவன் அருகில் சென்று அவளை மீட்டு நிலைமையை பதற்றம் இன்றி ஆறுதல் செய்து சாலை ஓரம் அழைத்து சென்றான். அவள் கைகளில் ஏற்பட்ட சிராய்ப்புகளை சரி செய்து கொண்டே ரொம்ப தேங்க்ஸ் என்று நிமிர்ந்து பார்த்தாள்.
யாரை காண குரல் கேட்க துடித்தானோ அவள்.

எழுதியவர் : அமர்நாத் (19-Oct-17, 11:24 am)
Tanglish : aval indri avan
பார்வை : 487

மேலே