அமர்நாத் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  அமர்நாத்
இடம்:  Madurai
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Mar-2017
பார்த்தவர்கள்:  62
புள்ளி:  25

என் படைப்புகள்
அமர்நாத் செய்திகள்
அமர்நாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2017 12:07 am

கண்கள் பார்த்ததில்லை மூச்சு காற்றை..
உண்மை தான் என் வாழ்வின் மூச்சுகாற்றான உன்னை இன்னும் காணவில்லை நான்..

மேலும்

அமர்நாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2017 11:57 pm

ஆழ் கடலில் கடலோடியின் கண்கள் தேடிடும் கரையை...
ஒற்றை காலில் நின்றாலும் கொக்கின் கண்கள் தேடிடும் மீனை..
முப்போகமும் பொழியாதா என உழவனின் கண்கள் தேடிடும் மழையை..
தன் உயிரை பணயம் வைத்த போர்வீரனின் கண்கள் தேடிடும் எதிரியை..
ஊழல் செய்யும் அரசியல்வாதியின் கண்கள் தேடிடும் மறதி நோய் கொண்ட மக்களை..
பசியில் வாடும் ஏழையின் கண்கள் தேடிடும் மனிதரில் கடவுளை..
ஏனோ என் கண்கள் மட்டும் தேடுதடி என் வாழ்வில் நிஜமாக இருந்து கனவாக மாறி போன உன்னை.. என்
உயிரில் உறைந்து போன உன்னை..

மேலும்

அமர்நாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2017 11:35 pm

சட்டென மேலே பார்த்தன கண்கள்.
வான் எங்கும் திரள் திரளாய் வெண்மை கூட்டம்.
அடடா!நிலவினில் வடை சுடும் பாட்டியின் அடுப்பில் இருந்து வந்தனவோ அவைகள்..
மேக கூட்டங்களாய்...

மேலும்

அமர்நாத் - e.paramasivan RUTHRAA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2017 11:13 pm

புத்தகத்திருவிழா
============================ருத்ரா

வழ வழ அட்டைப்படத்தோடு ஒன்று.
கம்பியுட்டர் கர்ப்பப்பையிலிருந்து
அச்சாகி வந்த ஒன்று.
"மாடர்ன் ஆர்ட்" டில்
உடுத்துக்கொண்டு
புதிர் உருவதோடு
பளப்பாய் பளப்பாய் ஒன்று.
எத்தனை எத்தனை புத்தகங்கள்?
இதில் நீ எங்கு ஒளிந்திருக்கிறாய்?
அவள் கவிதைத்தொகுதியைத்தான்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
காதலை சொல்லும் புத்தகம் அது.
எனக்கு தலைப்பிலேயே
"ஐ லவ் யு" சொல்லப்போகிறாளாம்!
அந்த புத்தக்காடுகளில்
துருவி துருவிக்களைத்தேன்.
கடைசியில் கண்டுபிடித்து விட்டேன்.
தலைப்பை பார்த்து விட்டேன்.
அது.
"இர்மாப்புயல்"

==============================

மேலும்

நன்றி திரு.அமர்நாத் அவர்களே அன்புடன் ருத்ரா 24-Sep-2017 9:54 am
நல்ல கற்பனை கம்ப்யூட்டர் கர்ப்பப்பையில் இருந்து. மேலும் எழுதுங்கள். 23-Sep-2017 11:24 pm
அமர்நாத் - Gaston GN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2017 1:32 pm

உன்னை நினைத்து
கனவுகள் பல கண்ட கண்கள் -
நிஜத்தில் நீ இல்லை என்பதை ஏற்காது
கண் விழிக்க மறுக்கிறது

மேலும்

ஏக்கம் நிறைந்த வாழக்கை. அதிலே காணும் சுகம். இன்னும் எழுதுங்கள்.நன்று 23-Sep-2017 11:21 pm
அமர்நாத் - பாரதி நீரு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2017 3:03 am


காதலை சொல்லிக்கொடு
கற்றுக் கொள்கிறேனடி
#தேவதைக்காரி...✍

மேலும்

இரண்டடி குறள் போல, ,நன்று 23-Sep-2017 11:19 pm
விண்ணப்பங்கள் கண்கள் கட்டணம் இதயம் காதலின் பள்ளியில் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Sep-2017 10:57 am
அமர்நாத் - பாரதி நீரு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2017 3:09 am
இருகைகளால் கோப்பையை பற்றி
கைகளுக்குள் மிதச்சுட்டில்
இதமாய் பதுக்கிய நொடிகளில்
கோப்பையின் விளிம்பில்
இதழ் குவிய நெருங்கி
மிடர் மிடராய் நாவை
நனைத்து கடக்கையில்
நினைவின் சரமாய்
பொழிகிறது உன்நினைவுகள்...💘
♦ பாரதி நீரு...✍

மேலும்

சட்டென மனதிற்குள் பாய்கிறது. . நன்று 23-Sep-2017 11:16 pm
கசப்பும் இனிப்பும் நிறைந்தது நினைவுகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Sep-2017 11:01 am
அமர்நாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2017 7:26 pm

அவசர கதி உலகத்தில் அவசரமின்றி கொட்டும் மழை.
ஆயிரம் அட்டவணைகளை கன நேரத்தில் கலைத்து விட்டு அவசரமின்றி கொட்டும் மழை.
பள்ளி குழந்தைகளின் முகம் மலரச் செய்து அவசரமின்றி கொட்டும் மழை..
கடலோடிகளை கடல் அன்னையின் மடியில் தவழ விடாமல் அவசரமின்றி கொட்டும் மழை.
மொட்டைமாடி துணிகளை நனைய வைத்து வீட்டு பெண்களிடம் வசை வாங்கி அவசரமின்றி கொட்டும் மழை.
பல மதத்தினரை ஒரே இடத்தில் நனையாமல் ஒதுங்க வைத்து அவசரமின்றி கொட்டும் மழை.
வாழ்க்கை நிச்சயமற்றது என்பதை சொல்லாமல் சொல்லி கொண்டே அவசரமின்றி கொட்டும் மழை.

மேலும்

துளித்துளியாய் யதார்த்தங்களை பொழிகிறது கவிதை வானம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Sep-2017 10:46 am
அமர்நாத் - வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Apr-2017 11:58 am

நீ எழுதும் ஒவ்வரு கவிதைக்கும்
ஒரு வருட ஆயுள் உன் காதலிக்கு கூடும்
என கடவுள்
சொல்லிவிட்டால் என்ன செய்வது ?

இந்த உலகத்தில் நீண்ட நாள் வாழும்
பெண்மை நீயாகத்தான் இருப்பாய் !

மேலும்

மிக்க நன்றி நண்பரே 30-Apr-2017 9:07 am
கருத்தில் மகிழ்கிறேன் நன்றி 30-Apr-2017 9:07 am
தங்கள் கருத்திற்கு நன்றி மகிழ்வு நண்பரே 30-Apr-2017 9:07 am
அதிலும் அவன் இல்லாமல் அவள் வாழ மாட்டாள்.. கூடிய ஆயுளை கூட ஏற்கமாட்டாள். இனிமை ... 29-Apr-2017 12:57 pm
அமர்நாத் - வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Apr-2017 10:46 am

உனக்கென கவிதை எழுதும் நேரத்தில்
கடவுள் நேரில் வந்தால் கூட
காத்திருக்கட்டுமே இப்ப என்ன என்று !
அடுத்த அடுத்த கவிதைக்கான சொற்கள் தேடலில்
மனம் லயித்து கவிதை எழுதிக்கொண்டே இருக்கிறேன்

மேலும்

நல்ல சிந்தனை...வாழ்த்துக்கள் 29-Apr-2017 4:13 pm
காதலுக்கு பின் கடவுள்...! 29-Apr-2017 11:28 am
அமர்நாத் - பூ சுப்ரமணியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Apr-2017 1:41 pm

பெண் நினைத்தால்.......!

சிறுகதை By : பூ.சுப்ரமணியன்

விநாயகர் படத்தருகில் மணிபாரதி உட்கார்ந்து இருந்தாள். அவள் இருந்த அறைக்கு அருகில் உள்ள ஹாலில் அவள் அப்பாவும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் பேசுவது மணிபாரதிக்கு தெளிவாக கேட்டது
“ மணிபாரதியை எங்களுக்கு ரெம்பப் பிடித்துவிட்டது. உங்களுக்கும் எங்க பையன் சிவாவையும் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டீங்க. மத்த விசயங்களைப் பற்றியும் பேசலாமுன்னு நெனைக்கிறேன்” என்றார் மாப்பிள்ளையின் அப்பா தணிகாசலம்.
“ பேஷாகப் பேசலாம் சம்பந்தி. எனக்கு மணிபாரதி ஒரே மகள். நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்களோ? சொல்லுங்க...! என்று மணிபாரதியின

மேலும்

Nice 21-Apr-2017 7:28 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே