இவ அரிசியா இன்னொருத்தி பருப்பா

ஏன்டியம்மா செம்பருத்தி அஞ்சு வருசம் கழிச்சு நம்ம கிராமத்துக்கு வந்திருக்கற. எல்லாம் நல்லா இருக்கறீங்களா?
😊😊😊😊😊😊
உங்க புண்ணியத்தில எல்லாம் நல்ல இருக்கறோம் பாட்டிம்மா.
😊😊😊😊😊
உங் கூட வர்ற சின்னப் பொண்ணு யாரு? உனக்கு ரட்டை பெண் கொழந்தைங்க பொறந்திருக்கிறதாத்தானே நாலு வருசத்துக்கு முன்னாடியே சொன்னாங்க.
😊😊😊😊😊😊
ஆமாங்க பாட்டிம்மா. நாங் காலைல பத்து மணிக்குத்தான் நம்ம ஊருக்கு வந்தேன். இவதான் ரட்டைக் கொழந்தைகள்ல மூத்தவ. சின்னவ அவ அப்பாகூட நாளைக்கு வருவா.
😊😊😊😊😊
ஓ.....அப்பிடியா. சரி இவ பேரு என்ன?
😊😊😊😊😊
இவ பேரு 'அர்ஷி' பாட்டிம்மா.
😊😊😊😊
இவ அரிசியா? அப்ப... சின்னப் பொண்ணு பேரு 'பருப்பா'?
😊😊😊😊😊
போங்க பாட்டிம்மா. எம்பது வயசுக்கு மேல ஆகியும் பேருங்களக் கிண்டல் பண்ணறீங்க.
😊😊😊😊😊
நான் என்னடி செய்யட்டும் செம்பருத்தி. திரைப்பட ரசனையில தமிழ் நாடே வீணாப்போச்சு. நம்ம ஊருல நாப்பது வயசுக்கும் கீழ இருக்கற ஒரு பொண்ணு ஆணு பேருகூட தமிழ்ப் பேரா இல்லா. எல்லாம் இந்திப் பேருங்க. இந்திக்காரங்க நம்மளையும் மொழியையும் பத்தி எவ்வளவு கேவலமா நெனைப்பாங்க. எனக்கு வெக்கமா இருக்குதடி செம்பருத்தி. சரி சின்னவ பேரு என்னடி?
😊😊😊😊
அவ பேரு 'ஆருஷி' பாட்டிம்மா.
😊😊😊😊😊😊
அவ பேரு ஆ ரசியா? நல்லா வச்சீங்கடி பேரு? ஆ....ருசி...அடடா ருசி. ஓஓஓஓ ருசி...நாக்கில தண்ணி வருதடி செம்பருத்தி. அந்த 'ருசி'யோட.வேலை.
😊😊😊😊😊
பாட்டிம்மா உலகம் போற போக்கில நாமும் போயாகணும். டார்வின்ங்கற அறிவியல் அறிஞர் 19 ஆம் நூற்றாண்டிலே 'பரிணாம வளர்ச்சியில் குரங்கிலிருந்து மனிதர்கள் தோன்றினார்கள்'ன்னு சொன்னத உலகம் முழுக்க இருக்கற அறிவியல் அறிஞர்கள் எல்லாம் ஏத்தூட்டாங்க. ஆனா நம்ம நாட்டில ஒரு பிரபலமானவர் "குரங்கிலிருந்து மனிதர்கள் தோன்றினதை யார் பார்த்தது" - ன்னு கேக்குறார். இதை டார்வினே வந்தாலும் சாட்சியோட வந்தா டார்வினின் கோட்பாட்டை நம்புவாங்க போல.
😊😊😊😊
அட எழவே... மனுசங்க கொரங்கிலிருந்து வந்தவங்களா? சரி. அது கெடக்குது. உம் பொண்ணுங்க பேருங்களுக்கு அர்த்தம் சொல்லுடி செம்பருத்தி.
😊😊😊😊😊
மூத்தவளுக்கு ஒரு இந்தி நடிகை பேர வச்சோம். அவுங்க பேரு அர்ஷி கான். சின்னவ பேரு செய்திகள்ல பல வருசமா வந்த பிரபலமான 'ஆருஷி' -ங்கற பேரு. இந்தப் பேருங்களுக்கு என்ன அர்த்தம்னு கேக்காதீங்க. அதத் தெரிஞ்சு என பண்ணப் போறீங்க?
😊😊😊😊
சரீடியம்மா நா அதத் தெரிஞ்சு எதுவும் ஆகப்போறதில்லை.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■◆◆■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
சிரிக்க அல்ல. சிந்திக்க.
சிந்திக்க. திரைத் தமிழைத் தவிர்ப்பது கற்றவர்க்கு அழகு. தாய்மொழிப் பெயர்களைப் புறக்கணிக்கக் கூடாது.
◆◆◆◆◆◆◆◆◆◆◆●●●◆●◆◆◆◆◆●●●●●●●◆◆◆●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

எழுதியவர் : மலர் (23-Jan-18, 5:03 pm)
பார்வை : 309

சிறந்த நகைச்சுவைகள்

மேலே