புறா - பறி

அடியே பட்டணத்து அழகிச் செல்லம் யாரடி அங்க உம் பின்னாலே உன்ன மாதிரிய உம் வயசுல இன்னொரு அழகு ரதம் வருது.
😊😊😊😊😊
பாட்டிம்மா நாங்க இந்த ஊருக்குப் புதுசு. எங்க அப்பாவோட நண்பர் மாடசாமி அய்யா எங்கள ஊர்த் திருவிழாவுக்கு அழைச்சிருந்தாரு. அதான் குடும்பத்தோட வந்திருக்கிறோம். நானும் எந் தங்கச்சியும் ஊரச் சுத்திப்பாக்கறோம்.
😊😊😊😊😊
அடடா. மூணாவது தெரு மாடசாமி வீட்டு விருந்தாளிங்களா? ரொம்ப சந்தோசம்டா கண்ணு. ஆமாம் உம் பேரையும் உந் தங்கச்சி பேரையும் சொல்லுடி கண்ணு.
😊😊😊😊😊
எம் பேரு புறா. எந் தங்கச்சி பேரு பறி.
😊😊😊😊
என்னடி ஆகாசத்தில பறக்கற புறாவும் கெணத்தில ஏத்தம் பூட்டி தண்ணி எரைக்க பயன்படுத்தின பறியுமா அக்காளும் தங்கச்சியும்?
😊😊😊😊😊😊😊
பாட்டிம்மா நாங்க சென்னை மாநகரத்தில வசிக்கறவங்க. இப்பெல்லாம் காஞ்சு கருவாடாப் போன பட்டிக்காட்டிலயே யாரும் தமிழ்ப் பேருங்கள பிள்ளைங்களுக்கு வைக்கறதில்ல. நாங்க புறவா பறியா இருக்கறது தப்பா?
😊😊😊😊😊😊
தப்பு இல்லடிச் செல்லம். மகாராசியா நீயும் உந் தங்கச்சியும எங்க வறண்ட ஊரப் பாருங்கடி.
■■■■■■◆■■■■■■■■■■◆■■■■■■◆■■
Pura = pure
Pari = beauty, fairy
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
சிரிக்க அல்ல. சிந்திக்க.
திரைத் தமிழைத் தவிர்ப்போம். கற்றோர்க்கு உரிய தமிழில் எழுதுவோம்.

எழுதியவர் : மலர் (24-Jan-18, 12:58 am)
பார்வை : 233

சிறந்த நகைச்சுவைகள்

மேலே