தண்டனை
நேற்றைய செய்தித் தாளில் நான் படித்து
ரசித்து சிரித்த ஒரு செய்தி ...................
பீஹார் மாஜி முதல் மந்திரி லல்லுவிற்கு
நடந்து கொண்டிருக்கும் ஒரு வழக்கில்
மாஜிஸ்திரேட் கோர்ட் ஐந்து வருட
சிறை வாசம் என்று தீர்ப்பு அளிக்க ,
லல்லுவும் சளைக்காமல், தீர்ப்பு வழங்கிய
மாஜிஸ்திரேட் இடம் கேட்டாராம் ...........
"ஐயா அடுத்த என் வழக்கு விசாரணைக்கு
வரும்போது கொஞ்சம் கருணைக் காட்டி
தண்டனையை குறைக்கவேண்டும் "
இது எப்படி இருக்கு , தவறுகள் செய்துகொண்டே
இருப்போம், தண்டனை கிடைத்தாலும்,
ஆனால் தண்டனை குறைக்க வேண்டும்........
அன்று தருமி எழுதிய கவிதையில் குறைகள்
பல இருந்தும், அதற்க்கு பரிசு வேண்டும்
மன்னனிடம் கேட்டானாம், ஒவ்வொரு குறைக்கும்
சிறிது போர்க்கசு குறைத்துக்கொண்டு, கவிதைக்கு
பரிசு வேண்டியது போல் இருக்கு .............இந்த
லல்லு வின் கூற்று.....................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
..