என்னடி கோலம் இது

ஏன்டி மருகளோ என்னடி கோலம் இது?
😊😊😊😊😊
எந்தக் கோலத்தைப் பத்தி சொல்லறீங்க அத்தை?
😊😊😊😊😊
உன்னோட கைக்கோலத்தைப் பத்தித்தான்டி சொல்லறேன்.
😊😊😊😊😊
கைக் கோலமா?
😊😊😊😊😊😊
ஆமாம்டி உன் மேலாடை இரண்டு கையிலயும் வெட்டி இருக்குதே என்ன கோலம்டி இது?
😊😊😊😊😊
இதுதான் அத்தை ஸ்டைல்.
😊😊😊😊
என்னது இசுடைலா? உனக்கு வெக்கமா இல்லை?
😊😊😊😊😊😊
அத்தை, என்னச் சீண்டாதீங்க. வெக்கப்படவேண்டியது உங்க மகன் தான். என்ன மாதிரி அவரும் சட்டையில முழங்கைக்கும் தோள்ப்பட்டைக்கும் இடையில இரண்டு கையிலும் சட்டையை என்ன மாதிரி வெட்டிவிட்டுக்கச் சொன்னா அதைச் செய்யமாட்டேன்னு அடம்பிடிக்கிறாரு. அவருகூட சேந்து வெளில போக எனக்கு வெக்கமா இருக்குங்க அத்தை.
😊😊😊😊
திரைப் பைத்தியம் பிடிச்சவளே எதோ நீ எம் பையனுக்கு நீ மொறப் பொண்ணு ஆச்சேன்னு உன்ன மணம் முடிச்சு வச்ச என்னத்தான் நா மொத்திக்கணும். இசுடைலுக்காரியாம் இந்த சீனமூஞ்சிக்காரி.
√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√😊😊😊😊😊😊😊😊😊😊😊😢😢😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க. திரைத் தமிழைத் தவிர்ப்போம். மொழிப் பற்றை வளர்ப்போம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

எழுதியவர் : மலர் (25-Jan-18, 9:59 pm)
Tanglish : ennadi kolam ithu
பார்வை : 280

மேலே