சந்தியா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சந்தியா
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  23-Jun-2001
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-May-2017
பார்த்தவர்கள்:  156
புள்ளி:  38

என்னைப் பற்றி...

என் தனிமையுடன் நான் கலந்து விட்டவள்

என் படைப்புகள்
சந்தியா செய்திகள்
சந்தியா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jan-2018 9:04 pm

இந்த வயிற்றுக்காத் தான்
நாம் படும் பாடுகள் எத்தனை
பிறர் வயிறு காயக் கூடாதென
காயும் வெயிலில் மாயும்
விவசாயிகள் தான் எத்தனை
வயிற்றுக்காக கூலிப்படையாய் சேர்ந்து
தூக்குக் கயிற்றை முத்தமிட்ட
இதழ்கள் தான் எத்தனை
அறிவு மறுத்தும் மனம் கணத்தும்
வயிற்றுக்காக வலையில் சிக்கிய
உடல் வியாபாரிகள் தான் எத்தனை
வாசிக்கத் துடிக்கும் வாலிபத்தை
வறுமையின் கைகளில்
வாரிக் கொடுத்த வயிறு இது
ஆனால் பிறர் வயிற்றை நிரப்பச் செய்து
நம் மனத்தை நிரப்பும்
தொப்புள் கொடி கயிறு இது

மேலும்

உணர்வுகள் என்பதை மட்டும் இறைவன் பொதுவாகக் கொடுத்ததன் காரணம் இதனை உணர்வதற்குத்தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Jan-2018 10:24 pm
நிதர்சனம் நட்பே....... ஆனால் என்ன செய்ய இயலும் தற்சமயம் நடக்கும் சூழ்நிலை அப்படி.... 21-Jan-2018 9:59 pm
சந்தியா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2018 3:51 pm

• மானுடத்துள் மனிதத்தை நுழைத்து
• மனத்தை திறம்படுத்தலே கல்வி
• கால்வாயை பண்படுத்தி
• பயன்பட செய்தலே கல்வி
• காடும் மலையும் மட்டுமே இருந்த காலத்தில்
• பகிர்தல் என்னும் பம்பரம்
• கால வட்டத்துள் சுழன்றி வந்தது
• ஆனால் சீராட்டி வளர்க்கும்
• அன்னையின் வாழ்வையே சிதைப்பது தான்
• இன்றைய சமூகம் என்னும் கட்டமைப்பு
• மாறுதல் என்பது மனதிலிருந்தே தொடங்கும் மர்மம்
• ஆதியும் அந்தமும் அற்ற ஓர் சகாப்தம் அது
• மாற்றான் மனத்தை
• மதிக்க கற்றுக் கொள்வதே தூய கல்வி
• தேவையை நோக்கி தேடலைத் தொடருங்கள்
• தொலைவை நோக்கி தொய்வை விரட்டுங்கள்

மேலும்

உங்கள் வாதமான கருத்துக்களை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் திறமையுள்ளவனுக்கு கல்வி மட்டும் கிடைக்கின்றது ஆனால் வாழ்வாதாரம் நகர்த்த வேலைகள் தான் கிடைக்காமல் போகிறது. முதல் எழுத்தைக் கூட அறியாதவன் பின்னால் ஒரு பட்டதாரி கை கட்டி நிற்கும் நிலை இந்த உலகின் மூடத்தனத்தை பறைசாற்றுகின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Jan-2018 6:32 pm
நிதர்சனம் நட்பே....... 19-Jan-2018 7:50 pm
சந்தியா - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

பள்ளி கல்லூரியில்ஆண் பெண் ஈர்ப்பு ,நட்பு ,காதல்

௧ ஆண் பெண் ஈர்ப்பு
௨ ஆண் பெண் நட்பு
௩ ஆண் பெண் காதல்

இதில் எந்த தலைப்பையும் பற்றி எழுதலாம் .

மேலும்

போட்டி முடிவுகள் ?? 29-Nov-2017 9:57 am
சரி சார் அனால் கொஞ்சம் நேரம் ஆகும் அதாவது நாளைக்கு சமர்ப்பிக்கலாம் சார் 08-Oct-2017 8:15 pm
இதையே கவிதையாக எழுதி சமர்ப்பிக்கவும் 08-Oct-2017 7:32 pm
இதையே கவிதையாக எழுதி சமர்ப்பிக்கவும் 08-Oct-2017 7:32 pm
சந்தியா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2017 6:35 pm

நாங்கள் தினந்தோறும்
அழுதுகொண்டே இருக்கிறோம்
காலை எழுந்தவுடன்
கண்ணீர் சிந்துகிறோம்
கழிவு கலந்த உணவை
உண்ணுகிற போது அழுகிறோம்
உங்கள் பிச்சைக்காக நாங்கள்
அழுது கொண்டே தான் இருக்கிறோம்
இச்சமூகத்தில் நாங்கள் பிறந்தபோது
சுவாசித்த முதல் காற்று
உங்கள் வீட்டு கழிவறை நாற்றம்
எங்கள் நாட்கள் இருட்டாக தான் இருக்கும்
ஏனென்றால் எங்கள் வாழ்வின் சூரியன்
உதயமானதே இல்லை
எங்களது மரணம் உங்களது
திட்டமிடப் பட்ட கொலை
எங்கள் கண்களில் ஈரமும் இல்லை
கதறுவதற்கு நேரமும் இல்லை
நாங்கள் கழுவ வேண்டிய கழிவறைகள்
இங்கே நிறைய உள்ளன
எங்களிடம் காயங்களும் கண்ணீரும்
நிறையவே உள்ளன
நிராகரிப்பின் நிழல் நாங்கள்

மேலும்

பிறப்பிலும் இறப்பிலும் ஒற்றுமையான மனிதன் வாழும் போது மட்டும் ஏன் வர்க்கம் பிரிக்கிறான் என்று சிந்திக்கும் போது தான் வாழும் வாழ்க்கையும் கசக்கிறது. மனிதத்தை காத்திருந்து சருகை விட மலிந்து சடலமாக ஏழைகளின் வரலாறுகள் மண்ணில் ஏராளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Oct-2017 10:20 am
மனிதரில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது இல்லை .. இன்னமும் ஏடுகளில் மட்டுமே உள்ள வார்த்தைகள் இவை.. சாலைகளில் கழிவுகளை அகற்றும் போது கண்டும் காணாமல் கடந்து போகும் பார்வை உள்ள குருடர்களை காணலாம்.. உழைக்கும் இனமே உலகை ஜெய்த்திடும் ஒருநாள்.. 19-Oct-2017 8:19 pm
சந்தியா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2017 10:14 pm

ஒவ்வொரு பெண்ணும் ஆணாகிறாள்
தன் கணவனின் துயரைக் தீர்க்கையிலே
ஒவ்வொரு ஆணும் பெண்ணாகிறான்
தன் மனைவியின் சிரிப்பைப் பார்க்கையிலே

மேலும்

இது போன்ற வாழ்க்கையில் தான் முழுமையிருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Sep-2017 8:00 am
சந்தியா - ப திலீபன் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

தமிழ்ச் சமூகத்தில் கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வாழ்வில் ஒருமுறையாவது கவிதை எழுதாதவர்களை இங்கே பார்ப்பது அரிது. தரத்தையும் தாண்டி அப்படி எழுதத்தூண்டுவது நம் சமூகத்தின் சிறப்புகளில் ஒன்று. அப்படி எழுதும் பல கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த போட்டி. பிரதிலிபியின் மாபெரும் கவிதைப்போட்டி.

கவிதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.

ஒருவர் அதிகபட்சம் 5 கவிதைகள் வரை அனுப்பலாம்.

கவிதைகள் 30 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் நலம்.

போட்டிக்கு கவிதைகள் மட்டுமே அனுப்பவேண்டும்.

மேலும்

இன்னும் 5 தினங்களில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும். நன்றி 15-Nov-2017 7:58 pm
போட்டிக்கான முடிவுகளை எப்போது அறிவிப்பீர்??? 13-Nov-2017 12:56 pm
மின்னஞ்சல் முகவரி அனுப்பவும்... 09-Oct-2017 12:59 pm
மின்னஞ்சல் முகவரி அனுப்பவும் 08-Oct-2017 6:41 pm
சந்தியா அளித்த படைப்பில் (public) ARUNAN KANNAN மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Aug-2017 7:58 pm

மெல்ல பேசுங்கள்
காற்றின் காதுகளில் பட்டு
புழுதிகளைக் கிளப்பப் போகிறது
திசைகளை மட்டும்
வர்ணம் பூசினால் போதது
அதன் அழகுக்குத்
தங்க நிலவை சூடுங்கள்
உள்ளம் என்னும் கர்பகத்தில்
காதல்லென்னும் தீபத்தை
யேற்றி வையுங்கள்
அதன் வெப்ப ஒளியில்
ஏற்றத் தாழ்வுகள்
எரிந்து அழியட்டும்
சகாப்த சத்ததை
அடுத்த சந்ததி வாசித்து
உள்ளம் உவக்கட்டும்

மேலும்

சிறப்பு மிக சிறப்பு 14-Nov-2017 3:16 pm
உள்ளம் என்னும் கர்பகத்தில் காதல்லென்னும் தீபத்தை யேற்றி வையுங்கள் ... அழகிய வரிகள் சிறப்பு தோழி 28-Aug-2017 10:12 am
நிச்சயமாக. நன்றி தோழர் 27-Aug-2017 2:01 pm
நன்றி ! நிச்சயமாக... 27-Aug-2017 2:01 pm
சந்தியா அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Aug-2017 7:39 pm

இவ்வுலகில் எவராலும்
விவரிக்க இயலாத கணமென
என் உயிர் உலகை விட்டுப்
பரிப்போகும் இறப்பின் விசித்திர
வாசலையே எண்ணியிருந்தேன்
ஆனால் உன்னைக் கண்ட போது
நான் தெளிவாய் உணர்ந்தேன்
அன்பே
உன் கருவிழிக்குள் நான்
சிறைப்படும் நேரம்
உன் விழிகள் என்னை
இமைக்காது காணும் வேளை
உன் மனது என் காதல் குரலை
இசைக்கும் கணம்
காற்றோடும் என்னோடும்
உன் வாசனை கலக்கையில்
உன் இதழ்கள் என்
இமைகளில் இதழ் பதிக்கத்
தேடும் போது
நான் கேட்கிறேனே
என்னுடைய அனைத்தையும் நான்
உன்னிடத்தில் இழந்துவிட்டேன்
அன்பே
இனி ஒன்றோடு ஒன்றாகி
என் இமையாக நீ ஆகி
வாழ்வோமா என..
அக்கணம் தான் எவராலும்
விவரிக்கப் பட இயலாது என
உண

மேலும்

காதல் ஒரு அழகான புல்லாங்குழல் காயப்பட்டும் சுகராகம் மீட்டுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Aug-2017 1:15 am
நன்றி தோழர். மிக்க மகிழ்ச்சி 24-Aug-2017 8:20 pm
அருமை ....அழகு சந்தியா ...நன்று வாழ்த்துக்கள் 24-Aug-2017 8:00 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

முத்துக்குமார்

முத்துக்குமார்

திண்டுக்கல்
கௌரி சங்கர்

கௌரி சங்கர்

Home - Oddanchatram
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்
அருண்குமார்

அருண்குமார்

எறையூர்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (11)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
மேலே