கல்வி

• மானுடத்துள் மனிதத்தை நுழைத்து
• மனத்தை திறம்படுத்தலே கல்வி
• கால்வாயை பண்படுத்தி
• பயன்பட செய்தலே கல்வி
• காடும் மலையும் மட்டுமே இருந்த காலத்தில்
• பகிர்தல் என்னும் பம்பரம்
• கால வட்டத்துள் சுழன்றி வந்தது
• ஆனால் சீராட்டி வளர்க்கும்
• அன்னையின் வாழ்வையே சிதைப்பது தான்
• இன்றைய சமூகம் என்னும் கட்டமைப்பு
• மாறுதல் என்பது மனதிலிருந்தே தொடங்கும் மர்மம்
• ஆதியும் அந்தமும் அற்ற ஓர் சகாப்தம் அது
• மாற்றான் மனத்தை
• மதிக்க கற்றுக் கொள்வதே தூய கல்வி
• தேவையை நோக்கி தேடலைத் தொடருங்கள்
• தொலைவை நோக்கி தொய்வை விரட்டுங்கள்

எழுதியவர் : சந்தியா (19-Jan-18, 3:51 pm)
Tanglish : kalvi
பார்வை : 81

மேலே