என்னுயிர் தோழி
(நீயும் நானும்)
அன்பும் அறனும்
நீயும் நானும்
நம்பிக்கையும்
நாணயமும்
நீயும் நானும்
கார்மேகமும்
குளிர்காற்றும்
நீயும் நானும்
கண்ணும் இமையும்
நீயும் நானும்
காற்றும் மரமும்
நீயும் நானும்
தாயும் சேயும்
நீயும் நானும்
ஆசையும் மனமும்
நீயும் நானும்
இறைவனும் அருளும்
நீயும் நானும்
கதிரவனும் கிழக்கும்
நீயும் நானும்
பூவும் மென்மையும்
நீயும் நானும்
மண்ணும் பொன்னும்
நீயும் நானும்
கொடியும் கொம்பும்
நீயும் நானும்
(குழந்தையும் மழலையும்)
என்னுயிர் தோழியே
நீ பல்லாண்டு வாழியே...