இந்த அன்பு மனசு

உன்னிடம் பேச மட்டும்
எப்போதும் ஆயிரம் கதைகள் இருக்கிறது
உன்னிடம் வீச மட்டும்
என்னுடைய வாசம் தவம் கிடக்கிறது

உன்னுடைய நேசம் மட்டும்
என்னிதய வாசலுக்குள் உறங்கி கொண்டிருக்கிறது
உன்னுடைய பாசம் மட்டும்
எனக்குள் ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் பிரசவிக்கிறது

உன்னுடைய உருவம் மட்டும்
எங்கேயும் போகாமல் ஒட்டிக் கொள்கிறது
உன்னுடைய நினைப்பு மட்டும்
என்னிதயத்த நீங்காமல் நிரப்பி இருக்கிறது

உன்னுடைய நிகழ்காலத்தோடு தான்
என்னுடைய நிகழ்காலம் கெட்டியாக ஒட்டிக் கொள்கிறது
உன்னுடைய எதிர்காலத்தோடு தான்
என்னுடைய காலடி தடங்கள் இணைந்திட நினைக்கிறது

என்னையும் உன்னையும்
அந்த கால சுனாமி
என்றாவது ஒருநாள்
இழுத்து சுருட்டி
ஒருபுள்ளியில்
சேர்த்துவிடும்
அந்த நாளுக்காக
காத்திருக்கிறது
இந்த அன்பு மனசு !!

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (20-Oct-17, 12:14 pm)
Tanglish : intha anbu manasu
பார்வை : 1650

மேலே