உன்னை மட்டும்

என் இரவுகள்
உன் நினைவுகளோடே முடிகிறது
என் சிறகுகள்
உன்னை சுமந்திடவே துடிக்கிறது

என் அதிகாலை
உன் நினைவுகளோடே விடிகிறது
என் இதிகாசம்
உன் கவிதைகளையே பாடுகிறது

என் பகல்
உன் நினைவுகளோடே வாழ்கிறது
என் நகல்
உன் முகத்தையே காட்டுகிறது

என் வெயில்
உன் வியர்வைகளை தேடுகிறது
என் இதய குயில்
உன் இசைதனையே பாடுகிறது
என் மனமயில்
உன் கண்ணசைவுகளிலே ஆடுகிறது
என் துயில்
உன் அருகாமையை நாடுகிறது
என் தவில்
உன் தாளத்தைமட்டும் இசைத்திருக்கும் நாதமாக
என் வில்
உன் விரல்களைமட்டும் பிடித்திருக்கும் நாணாக
என் உயில்
உன் பெயரைமட்டும் எழுதியிருக்கும் சொத்தாக
என் எல்லாமான
உன் உயிரைமட்டும் சுமந்திருக்கும் வித்தாக நான்

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (17-Oct-17, 5:17 pm)
Tanglish : unnai mattum
பார்வை : 820

மேலே