தேடுகிறேன் நான்

தாய் மடிதேடும் மழலையாக
தந்தை தோள் நாடும் மகளாக
தடவி தடவி உன்னைத் தேடுகிறேன்
தேடி தேடி தவித்துப் போகிறேன்

காற்றில் நீ கலந்துவிட்ட காற்றில்
எங்கேனும் உன் சுவாச மிச்சங்கள் இருக்குமோ

மண்ணில் நீ புதைந்துவிட்ட மண்ணில்
எங்காவது உன் மனசின் துகள்கள் இருக்குமோ

விண்ணில் நீ ஒளிந்துகொண்ட விண்ணில்
எங்காவது இருந்து என்னை எட்டித்தான் பார்ப்பாயோ

நிஜத்தில் நீ தொலைந்ததும் கூட யார்
கண்ணிலாவது எனக்கு தெரிந்து விட மாட்டாயா

என்று உன்னைத் தேடுகிறேன்
என்றும் உன்னைத் தேடுகிறேன்

நீ இருந்த நாற்காலியில்
உன் தோள்சாய்ந்து கொள்கிறேன்
நீ அணிந்த செருப்பில்
உன்னோடு நடந்து போகிறேன்
நீ படுத்த கட்டிலில்
உன்னோடு உறங்கி கொள்கிறேன்
நீ அணிந்த கடிகாரத்தில்
உன் நேரம் திரும்பி வரக்கூடாதா
நீ கட்டிய வேட்டியில்
என் வெயில் காலம் போகிறது
நீ கட்டிய லுங்கி
என் குழந்தை துயிலும் தொட்டிலானது

நீ அணிந்த சட்டை
என் இரவின் துணை ஆகிறது
நீ மூடிய போர்வையில்
என் குளிர் போக்கி சூடாகிறேன்
நீ வளர்த்த மரத்தில்
என் ஓய்வு நேரம் ஆறிக்கொள்கிறேன்

நீ சூடிய மல்லிகை
என் தலையில் இன்னும் வாசனையாய்
நீ சூடிய நீயும்
மலர் கூட்டத்தில் என்று யோசனையாய்

நீ தந்த முத்தத்தின்
ஈரங்கள் எனக்குள் இன்னும் வாடாமலே
நீ தந்த சோகத்தின்
ஈரங்கள் எனக்குள் இன்னும் காயாமலே

உன் அறையில் எல்லாம்
இருக்கிறது உன்னை மட்டும் தவிர
உன் எதிரில் சொல்ல
வேண்டிய எல்லாவற்றையும் உன் புகைப்படத்திடம் சொல்கிறேன்

உன் புன்னகை மட்டும்
புகைப்படம் என்றாலும் என்னுடன் பேசுகிறது
உன் குரல் மட்டும்
வீட்டு சுவர்களுக்குள் ஒளிந்து கொண்டது

என் குழந்தையில் உன்
சாயல் தேடும் குழந்தை ஆனேன் அப்பா
என் கண்படுபவரில் உன்
சாயல் தேடும் ஞானி ஆனேன் அப்பா

என் எதிரில்வரும் நரையில்
காண்கிறேன் நான் உன் முகமப்பா
என் காதில்விழும் குரலில்
கேட்கிறேன் உன் சத்தம் அப்பா

வருடம் தோறும் வரும்
கல்லறையில் தோள் சாய நினைக்கிறேன்
வந்தவன் பைத்தியம் என்று
சொல்வானென நினைத்து வெட்கி நகர்கிறேன்

தவறாமல் மெழுகு மட்டும்
ஏற்றிவிட்டு உன்னிடம் சண்டையிட்டு வருகுறேன்
தவறாமல் சொல்லிச் செல்லும்
நீ அன்று சொல்லாமல் போனதற்கு கோபித்தேன்

பேசாமல் உள்ளே இருக்கிறாய்
இருக்கிறாயா உள்ளே நீ இருக்கிறாயா அப்பா
தெரியாமல் இங்கே நிற்கிறேன்
வரத்தான் ஆசைப்படுகிறேன் உன்னோடு வர அப்பா

என்னை தோளில் எடுத்து
செல்ல வில்லை ஏனப்பா நான் வேண்டாமோ
என்றோ ஒருநாள் வருவேன்
இந்த இடத்தில் உன்னோடு சேர்ந்து உறங்கிடவே


மடிதேடும் மழலையாக
தந்தை தோள் நாடும் மகளாக
தடவி தடவி உன்னைத் தேடுகிறேன்
தேடி தேடி தவித்துப் போகிறேன்

காற்றில் நீ கலந்துவிட்ட காற்றில்
எங்கேனும் உன் சுவாச மிச்சங்கள் இருக்குமோ

மண்ணில் நீ புதைந்துவிட்ட மண்ணில்
எங்காவது உன் மனசின் துகள்கள் இருக்குமோ

விண்ணில் நீ ஒளிந்துகொண்ட விண்ணில்
எங்காவது இருந்து என்னை எட்டித்தான் பார்ப்பாயோ

நிஜத்தில் நீ தொலைந்ததும் கூட யார்
கண்ணிலாவது எனக்கு தெரிந்து விட மாட்டாயா

என்று உன்னைத் தேடுகிறேன்
என்றும் உன்னைத் தேடுகிறேன்

நீ இருந்த நாற்காலியில்
உன் தோள்சாய்ந்து கொள்கிறேன்
நீ அணிந்த செருப்பில்
உன்னோடு நடந்து போகிறேன்
நீ படுத்த கட்டிலில்
உன்னோடு உறங்கி கொள்கிறேன்
நீ அணிந்த கடிகாரத்தில்
உன் நேரம் திரும்பி வரக்கூடாதா
நீ கட்டிய வேட்டியில்
என் வெயில் காலம் போகிறது
நீ கட்டிய லுங்கி
என் குழந்தை துயிலும் தொட்டிலானது
நீ மூடிய போர்வையில்
என் குளிர் போக்கி சூடாகிறேன்
நீ வளர்த்த மரத்தில்
என் ஓய்வு நேரம் ஆறிக்கொள்கிறேன்

நீ சூடிய மல்லிகை
என் தலையில் இன்னும் வாசனையாய்
நீ சூடிய நீயும்
மலர் கூட்டத்தில் என்று யோசனையாய்

நீ தந்த முத்தத்தின்
ஈரங்கள் எனக்குள் இன்னும் வாடாமலே
நீ தந்த சோகத்தின்
ஈரங்கள் எனக்குள் இன்னும் காயாமலே

எழுதியவர் : யாழினி வளன் (12-Oct-17, 12:54 am)
Tanglish : thedukiren naan
பார்வை : 3555

மேலே