படைத்தனை வேண்டி

நஞ்சொன்று உண்டவனே,
ஐஞ்சென்று ஆணவனே,
நெஞ்சோடு நின்றவனே,
புஞ்சை என்றுவிளைபவனே
தஞ்சைதனை ஆழ்பவனே..!
பஞ்சையன் நானே..
தஞ்சமருளே தம்பதத்தில்..

படியளக்க கேட்டிலேன்
படியளந்து தந்திலேன்
பரமன்றி பாதைவேறு அறிகிலேன்

அறிவிலேன் ,அருளிலேன்
ஆனாலும் ஆநாதையிலேன்
அப்பனே....

ஆத்தனே,ஆற்றிலேன்
ஐயா அடிநென்ஞ்சை..

கூத்தனே குருதியே
ஏத்தனம் ஏந்துகினேன்
எம்முடல் அழுக்கறுப்பாய் என்று
தூயனே துயர்தீரே

இடரென நேரும் போது
சுடரென அழைப்பவனே..
நெருப்பனே நெற்றிக்கண்ணனே.

அதிர்வுக்கு அரசே
அண்டத்தின் ஆழ் பொருளே
எம் கோ வே நீயன்றி வேறுவழியறியேன் வந்தவழி நீ அல்லவோ...!

தாய்க்கும் தாய்யாமே
இந்நாய்க்கும் நீயாமே..

பட்டிணத்தானை பாகதில் அணைத்தவனே..

அழைக்கின்ற நாளுக்காக அழுதுகாத்திருக்கிறேன்
உம்மை தொழுது காத்திருக்கிறேன்..!

அழித்தலின் அரசே
சாம்பலானும் சற்றுமுன்னை
மறந்திலேன்...
இலக்கணம் காற்றிலேன்
இலக்கியம் காற்றிலேன்
இருள்சூழ் உலகில்
உன் அருள்சேர் இடமின்றி
ஆதரவு வேறுவேண்டேன்..

கருவில் உயிரனே,
உடல்தனை...
தீயிக்கு சோராக்கி
நீருக்கு நீறாக்கி
வளியில் தூசியாக்கி
வந்ததில்லை வாழ்ந்ததில்லை
நொந்ததில்லை நோற்றதில்லை
தில்லை தனை நினைத்ததில்லை
என அத்தனை கூற்றுக்கும்
நாற்று நட்டவனே
நாதனே..

அடியேனுக்கும் அருளே
அதுவன்று வேறு இல்லை
வாழ்வின் பொருளே...

எழுதியவர் : சுரேஷ் காந்தி (12-Oct-17, 1:21 am)
பார்வை : 225

மேலே