வெறி பிடித்த காதல் மிருகம்
தீடீரென்று
பச்சை நிற
கனவுகள் வருவதாக
தோன்றுகையில்
நான் யாரிடம் கேட்பது
தினமும்
பிரமிப்பின் படகில்
மிதந்து கொண்டிருக்கிறேன்..
நான்காம் நாள் கனவில்...
இரவின் நதிக்கரையில்
நின்ற படி
என்னை காதலிப்பதாக
சொன்னாய்....
வெந்தீர் குமிழ்களாக
பின் எங்கே
சென்று மறைந்தாய்...
அடங்காத காதலோடு
பச்சை கனவுகளில்
மான்களை போல
நினைவுகளை
துரத்திக்கொண்டு
ஓடிக்கொண்டிருக்கிறேன்...
வெறி பிடித்த
காதல் மிருகம் நான்.... !