Karthikeyan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Karthikeyan
இடம்:  கழுகுமலை (தூத்துக்குடி மா
பிறந்த தேதி :  01-Apr-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Feb-2016
பார்த்தவர்கள்:  164
புள்ளி:  19

என்னைப் பற்றி...

எழுதப்படாத கவிதைகளை தேடும் பறவை நான்

என் படைப்புகள்
Karthikeyan செய்திகள்
Karthikeyan - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2019 4:49 am

ஆளில்லா சாலையில்
உன் கை கோர்த்து நடக்கையில்
எனக்கும்
தொற்றிக்கொள்கிறது
உன் பெண்மையின் நாணம்

இமை தாழ இப்படியே
உன்னுடன்
கடைசி காலம் வரை செல்லுமா.....
காலம் பதில் தருமா....
என் அன்பு இராஷசியே
எப்படி மொழிபெயர்த்தாலும்
அழகாக சொல்ல முடிவதில்லை
உன் அசைவற்ற இதழ்களின் மௌனம் சொல்லும் வார்த்தைகளை
கவிதைகளாக.....

பேசாத மழழையாய்
பேனா உதிர்க்கும் வரிகளுக்காக
காத்திருக்கிறேன்
என்னோடு நீயிருக்கும்
அந்த சில நொடிகளில்
உன் வார்த்தைக்காக.....

மேலும்

அருமை அருமை 04-Jul-2019 8:38 pm
Karthikeyan - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2018 12:22 pm

தூரத்து வானின்
மூலையில் எழும் மின்னல் போல
சின்னதொரு
சமிக்கை செய்தாள்....

அவள் வருவதாய் கூறிய
பொய்யை நம்பி
காத்திருந்தேன்....

அந்தி சாய்ந்து காரிருள் பரவ
மெல்லவே வந்தாள்
எதிர்பார்த்தபடி அல்ல
என்னை
ஏமாற்றியபடி ....

மேலும்

Karthikeyan - அருண்ராஜ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2016 12:38 pm

இந்து பெண்ணுக்கு நேர்ந்த இந்த துக்க கரமான இந்த சம்பவம் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கோ அல்லது சிறுபான்மை பெண்ணுக்கோ நேர்ந்தால் என்ன செய்திருப்பார்கள் இந்த ஊடகம் மற்றும் அரசியல் வாதிகள் ..??!!

இந்துத்துவா என்பதை யார் வளர்க்கிறார்கள் ..?? இது போன்ற சம்பவங்களா???

மேலும்

நீங்கள் சொல்வது போல் பார்த்தால் தலித்துகள் வாழும் பகுதியில் ஒரு தலித்துக்கு கொலை நடந்தால் மேல் மட்ட ஜாதிகள்மற்றும் ஆண்ட ஜாதிகள் அமைதியாக கடந்து விட வேண்டுமா ...!!!!!?? அதை தடுக்க கூடாத ??!! எங்கள் ஊரில் வாழும் கீழ் ஜாதி மக்கள் காலை சீக்கிரமே குப்பை கூட்ட வருவார் அங்கு அவர்கள் தான் நிறைய இருக்கின்றனர் அப்போது அங்கு ஒரு கொலை நடந்தால்.. தடுக்க வேண்டியது மேல் ஜாதி மக்கள் பொறுப்பு இல்லையா..?? நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது .. 28-Jun-2016 8:44 am
நான் சொல்வது பிழை என்றால் மன்னியுங்கள் ஊடகத்தில் .. facebook இல் இடை போல் செய்தியைப் பார்தேன் .......... பெரும்பாலும் காலை 5 முதல் ரயிலில் வருபவர்கள் எல்லோரும் ஸ்வாதி இனமே .. மேல் மட்ட ஜனங்களே ..அய்யரும் மாமியும் தான் ஏன் மற்றவர்களை குறை சொல்கிறீர்கள் என எனக்கு தெரியவில்லை மற்றும் நுங்கம்பாக்கம் அவர்கள் சமூகம் நிறைய வாழும் பகுதியே .. காலை எழுபவர்களும் அவர்களே மனிதாபத்துடன் வேலை முக்கியம் என்றால் மற்ற விளம்பரம் பண்ணி என்ன பயன் ? 27-Jun-2016 10:02 pm
என் சங்கர் கொலையை கொலையாக எண்ணி எண்ணி அதை கொலையாக பார்க்கலாமே . சிறுபான்மை நல துறை அமைப்பு ஏன் வேலை வாங்கி தர வேண்டும் .. அரசாங்கம் பொருள் உதவி ஏன் செய்ய வேண்டும் ..??? ஸ்வாதிக்கு எந்த நலத்துறை உதவி செய்யும்... சொல்லுங்கள் .. பிறகு இதை கொலையாக மட்டுமே பார்க்கலாம் ..!!! 27-Jun-2016 6:26 pm
கேள்வி எழுப்புவதே கேவலமா !!! கேள்வி சரியானதாக இருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை கட்டாயமும் இல்லை .. அதற்கான பதில் தான் சரியாக இருக்க வேண்டும் அரசியல் கட்சிகள் மக்களுக்காக தானே . ஒருத்தி கோரமான முறையில் இறந்து கிடக்கிறார்கள் ..கண்டனம் சொல்ல ஆள் இல்லை ..ஆளும் அரசாங்கம் அமைதியாக இருக்கிறது .. இதுவே வேறு மதமோ சாதியோ இருந்தால் இந்த கொலையை எப்படி அணுகி இருப்பார்கள் என்று ..இதை தான் கேட்கிறார்கள் .. இந்த கேள்வியை கேட்பதால் என்ன தவறு .. கேள்வி எழுப்புவது குற்றமா ..!!!! 27-Jun-2016 6:23 pm
Karthikeyan - இராஜ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jun-2016 3:06 pm

பத்தர மாத்து தங்கம் உன்னை
பத்து மாதம் பார்க்கவில்லை
பத்தரமா நீ இருந்தும்-என்
பாதி இரவில் தூக்கமில்லை

எத்தனை காலம்தான் காத்திருப்பேன்
எனக்கென யாருமில்லை
எமன் வந்து அழைக்கும் முன்னை
என்னை நீயும் பாரு பிள்ளை..

மேலும்

நன்றி அண்ணா 14-Jun-2016 1:04 pm
நன்று 14-Jun-2016 11:09 am
தங்கள் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி அண்ணா 13-Jun-2016 7:46 am
நல்ல வரிகள் வளர்க தொடர்க 13-Jun-2016 7:42 am
Karthikeyan - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2016 4:18 pm

வானம் பார்க்க
வகுடெடுத்த நெற்றியில்
ஒரு புள்ளி வைத்து திலகமிடுவாள்

பளிப்பாக விண்ணோடும்
பரிதாப கண்ணோடும்
நிழலாடும் மண்ணோடும்
எப்போதும் கதையடிப்பாள்

எந்நகையும் அழகில்லை
இதழ் அரும்பும்
புன்னகை போல

எந்த இடமும் தூரமில்லை
அருகில் அவளிருக்க
எல்லாமே
அவளுக்காக அர்ப்பணம்
அழகான கவிதையும்
அளவில்லா நேரமும்

மேலும்

கவிதை போல் காதலும் இனிமை கவிதையின்றி காதலும் இல்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Jun-2016 5:43 pm
Karthikeyan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2016 12:03 pm

நீண்ட வானத்தில்
நெளிந்த மேகத்தின் நடுவே
வளைந்த வானவில்லில்
பூத்த நட்சத்திரம்

என் கன்னியவள் மூக்குத்தி

மேலும்

அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-May-2016 9:25 am
Karthikeyan - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2016 8:51 pm

அன்பே...

நீ உயர்கல்வியில்
சாதனை படைத்தாய் என்று...

உனக்கு ஊர்கூடி
பரிசளித்தது...

நான் உன் இதயத்தை மட்டும்
வென்று சாதனை படைக்க நினைத்தேன்...

இன்றுவரை எனக்கு
தோல்வி மட்டுமே...

நான் என் இதயத்தையே
உனக்கு பரிசளிக்கிறேன்...

நீ என் இதயத்தில் இருப்பதால்
எனக்கும் சந்தோசம்...

உன் இதயத்தில்
நான் இல்லை என்றாலும்.....

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 24-Feb-2016 8:22 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 24-Feb-2016 8:21 pm
இதயத்தில் நினைவாக வாழ்ந்தால் கூட போதும் கண்களின் ஓரத்தில் ஒரு துளி கண்ணீர் சிந்த 24-Feb-2016 12:10 am
தொடர்க 23-Feb-2016 8:28 pm
Karthikeyan - Shahmiya Hussain அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Feb-2016 6:48 am

விரும்பியே இதயத்தை
உனக்கு கொடையளித்த
வள்ளல் நான் - இன்று
கையேந்தி, சிரம் சாய்ந்து
கிடக்கிறேன் உன் முன்,
உயிர் துடிப்பை யாசகம் கோரி!

புறக்கணிப்பு சாட்டை கொண்டே
விரட்டியடிக்கிறாய் எனை நீயும்,
என்றாலும் - நிமிட முள்
மணித்தியால முள் கடப்பதன்ன
எ(ன்)னை துரத்தி பிடிக்குதே
உன் நினைவுகள் இங்கே!

உன் கண்களுக்குள் விரிந்த
எனக்கான உலகம்
ஒளியிழந்து போகுதே - நீ
இமை தாழ்த்தி மறுப்பினை
இடிகளாய் இறக்(கு)கையில்!

போற்றி போற்றி நாம் செய்த
காதலென்னும் காவியம்
கானலென கண் மறைய - உன்
பெயர் கொண்டு இயங்கும்,
இதயமது மௌனம் கொள்ளும்
வேலை நிறுத்தற் போராட்டம் செய்தே!

கன்னியிவள் கண்களதுவ

மேலும்

மலர் தூரல்கள் எதிர்பார்தேன், முள் மழைகள் பொழிகின்றாய்!... சிறப்பான வரிகள் தோழி ! 18-Apr-2016 6:42 pm
நன்றி நட்பே 01-Mar-2016 10:23 am
கல்லரை பூக்கள் கூட ஆசை கொள்ளும் கூந்தல் சேர!!! - அருமை 29-Feb-2016 12:10 pm
நன்றி.. 27-Feb-2016 3:22 pm
Karthikeyan - அரவிந்த் ரகு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2016 8:48 pm

விரட்டி விரட்டி அடித்தாலும்
விலகவில்லை விரக்தியின் முகம்
என் கண்ணாடியிலிருந்து நான்
முகம் பார்க்கும்போதெல்லாம்....
-அரவிந்த்

மேலும்

நன்றி நட்பே 22-Feb-2016 10:09 pm
நறுக்கென்ற வரிகள் நட்பே தொடர்க vedan 22-Feb-2016 8:48 pm
கருத்துக்கு நன்றி சகோதரி 22-Feb-2016 7:34 pm
விரட்தியை அழிக்க மனதின் திசையினை மகிழ்ச்சியான செயலினில் மாற்றுங்கள் ! 22-Feb-2016 7:15 pm
Karthikeyan - சஅருள்ராணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Feb-2016 12:03 pm

அரை நொடியும் அமர்ந்திடா என் கால்களும்,
அனுதினமும் அசைந்தாடும் என் கைகளும்,
அழுபவரும் கேட்டு சிரிக்கும் என் குறும்பு ஓசைகளும்,
முற்றிலுமாய் மாறியவண்ணம்,
மௌனத்தின் அமைதியில் நான்,

மடியில் தவழும் குழந்தையாய்,
மங்கை இன்னும் ஆடி திருகிறாலே என்னும் என் அன்னை ,

அமைதி நிலையில் எனை காண விரும்பாது,
ஆடித்திரியும் என் பிள்ளையின் கால்கள் எங்கே ?
அட குறும்பின் செல்வம் எங்கே ?
அழகின் அழகே என்ன ஆயிற்று என்று கேட்கிறார்.

நான் எப்படி சொல்வேன் ?
நகரும் காலம் என் விளையாட்டை அழித்து,
நாள்தோறும் வேலையை தருகிறது,
நகராது அமர்ந்தபடி கடமையாய் பாடம்படி,
நானே தருவேன் பட்டம்மடி என்கிறது என்று !

உள்

மேலும்

கருத்தும் கவியிலா அண்ணா அருமை !!! 25-Feb-2016 6:39 am
குறும்பு பெண்ணே கவிதையில் நீ உணர்வுகளின் கண்ணே ... கவி அருமை ... 24-Feb-2016 4:31 pm
நன்றி நண்பரே ! 22-Feb-2016 7:06 pm
அழகான நடையில், அற்புதமான வரிகள் 22-Feb-2016 5:24 pm
Karthikeyan - Karthikeyan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Feb-2016 4:54 pm

எப்பொழுதாவதுதான்
அமைகிறது
=====================

அழகான வரிகளை
அள்ளி வீசும் இரவை
அமைதியாய் ரசிக்கும் மனசு
========================

தலை கோதி
தூக்கத்தை
பரிசளிக்கும் காற்று
======================

மணல் படுக்கையில்
புள் விரித்து
போர்வையாகும் இருள்
======================

எங்கோ வீசும்
நிலாவின் ஒளி
இங்குவரை வெளிச்சம் தர
வேறு உலகிற்கு பயணிக்கிறேன்
புதிதாய் வந்த கவிதையோடு
=========================

மேலும்

மார்கழி மாத மாலை தென்றலாய் மணம்வீசி மனம்மயக்கும் மதுர வரிகள் !! முதல் பத்தியின் முடிவு வார்த்தை மனசு என்றில்லாது, மனம் அல்லது மனது என்றிருந்தால் மேன்மை !! 17-Feb-2016 5:15 pm
Karthikeyan - Karthikeyan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Feb-2016 10:38 am

என் கண்ணீர் மதுவை
நீ அருந்திவிட்டு
என்னை போதையாக்கிவிட்டாய்
மெதுவாக
மரணித்து கொண்டிருக்கும்
என்னை பார்க்க
மதுவாக வருவாயா
இல்லை
மருந்தாக வருவாயா

மேலும்

நன்றி நவிலல் இல்லை என் கருத்தின் எண்ணம் என் திருத்தம் உங்களுக்கு பொருத்தமாய் பட்டிடின் வருத்தமின்றி அதை திருத்தும் .... அது போதும் !! 17-Feb-2016 11:23 am
நன்றி நண்பா 17-Feb-2016 10:55 am
என் கண்ணீர் மதுவை நீ அருந்திவிட்டு (அருந்தும் அவ்வழகினை என் விழிகளுக்கு விருந்தாக்கிவிட்டு ) என்னை போதையாக்கிவிட்டாய் மெதுவாக மரணித்து கொண்டிருக்கும் என்னை பார்க்க மதுவாக வருவாயா ? இல்லை மருந்தாக வருவாயா? 17-Feb-2016 10:51 am
மேலும்...
கருத்துகள்

மேலே