சமிக்கை

தூரத்து வானின்
மூலையில் எழும் மின்னல் போல
சின்னதொரு
சமிக்கை செய்தாள்....

அவள் வருவதாய் கூறிய
பொய்யை நம்பி
காத்திருந்தேன்....

அந்தி சாய்ந்து காரிருள் பரவ
மெல்லவே வந்தாள்
எதிர்பார்த்தபடி அல்ல
என்னை
ஏமாற்றியபடி ....

எழுதியவர் : vedan (16-Oct-18, 12:22 pm)
சேர்த்தது : Karthikeyan
பார்வை : 79

மேலே