அவள்

அவள் கண்கள் பார்த்தேன்,
கவிஞனானேன் /
அவள் கன்னம் பார்த்தேன்,
விஞ்ஞானியானேன் /
அவளது இதழ்களில்
இலக்கியம் படித்தேன் /
அதனாலே காவியம் படைத்தேன் /

அவளின் இடை பற்றிக் கூறவா?
அவளது நடை பற்றிக் கூறவா?
இரண்டுக்கும் இடையில் சிக்கி விட்ட/ எனது மனம் பற்றிக் கூறவா?

அவள் கழுத்தை தடவும்
சங்கிலியாக மாற ஆசை /
காதோடு ஆடி வரும்
கம்மலாய் மாற ஆசை/

அவளின் சிவந்த மேனியில் /
ஒட்டியே உள்ள உடையாக மாற ஆசை /
குட்டிக் குட்டியாய் எத்தனையோ ஆசை/
குட்டி போட்ட படி என்னைக் கெட்டியாய்ப்
பிடித்துக் கொண்டு பண்ணுது பூசை /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (16-Oct-18, 11:52 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : aval
பார்வை : 181

மேலே