நான் நானல்ல

அரை நொடியும் அமர்ந்திடா என் கால்களும்,
அனுதினமும் அசைந்தாடும் என் கைகளும்,
அழுபவரும் கேட்டு சிரிக்கும் என் குறும்பு ஓசைகளும்,
முற்றிலுமாய் மாறியவண்ணம்,
மௌனத்தின் அமைதியில் நான்,
மடியில் தவழும் குழந்தையாய்,
மங்கை இன்னும் ஆடி திருகிறாலே என்னும் என் அன்னை ,
அமைதி நிலையில் எனை காண விரும்பாது,
ஆடித்திரியும் என் பிள்ளையின் கால்கள் எங்கே ?
அட குறும்பின் செல்வம் எங்கே ?
அழகின் அழகே என்ன ஆயிற்று என்று கேட்கிறார்.
நான் எப்படி சொல்வேன் ?
நகரும் காலம் என் விளையாட்டை அழித்து,
நாள்தோறும் வேலையை தருகிறது,
நகராது அமர்ந்தபடி கடமையாய் பாடம்படி,
நானே தருவேன் பட்டம்மடி என்கிறது என்று !
உள்ளம் துள்ளும் துள்ளலை மறைத்து,
ஊமையாய் கடக்கும் காலம் இது பிடிக்கவில்லை ...