என் அவள்
![](https://eluthu.com/images/loading.gif)
வானம் பார்க்க
வகுடெடுத்த நெற்றியில்
ஒரு புள்ளி வைத்து திலகமிடுவாள்
பளிப்பாக விண்ணோடும்
பரிதாப கண்ணோடும்
நிழலாடும் மண்ணோடும்
எப்போதும் கதையடிப்பாள்
எந்நகையும் அழகில்லை
இதழ் அரும்பும்
புன்னகை போல
எந்த இடமும் தூரமில்லை
அருகில் அவளிருக்க
எல்லாமே
அவளுக்காக அர்ப்பணம்
அழகான கவிதையும்
அளவில்லா நேரமும்