கார்த்திக் நிலா ரசிகன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கார்த்திக் நிலா ரசிகன் |
இடம் | : ஊத்தாங்கால்(நெய்வேலி) |
பிறந்த தேதி | : 21-Nov-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-May-2014 |
பார்த்தவர்கள் | : 248 |
புள்ளி | : 51 |
உன்னை போல் ஒருவன்.....!
உடலை விட்டு
உயிர் பிரிந்து சென்றும்
வாழ்கிறேன் !!!
என்னவளே!
உயிராய் நீ இருக்க
வெரும் உடலாய் நான்!!!
உடலை விட்டு
உயிர் பிரிந்து சென்றும்
வாழ்கிறேன் !!!
என்னவளே!
உயிராய் நீ இருக்க
வெரும் உடலாய் நான்!!!
இது இரவு வணக்கமா
காலை வணக்கமா
கொஞ்சம் சந்தேகமாய் இருக்கிறது....
அதனால்
வணக்கம் மட்டும் போதும்... இப்போது
வணக்கம் சொல்ல
வேண்டுமா...
நன்றி சொல்ல வேண்டுமா...
சந்தேகமாய் இருக்கிறது....
நன்றி சொல்லி
உறங்க போகிறேனா...
வணக்கம் சொல்லி எழ போகிறேனான்னு கொஞ்சம்
சந்தேகமாய் இருக்கிறது...
கடிகாரம் மட்டும்
மணிக்கொருமுறை
என்னை உறங்கச் சொல்கிறது...
நேரம் கடக்கிறது
விடியலும் வர
காத்திருக்கிறது....
உறக்கமின்னும் காணலையே...
இரவைத் தாண்டி
வந்தேன்...
விடியல் என் வாசல்
வாசல் வருமா....
இன்னும் சந்தேகமாய் இருக்கிறது..
உடலை விட்டு
உயிர் பிரிந்து சென்றும்
வாழ்கிறேன் !!!
என்னவளே!
உயிராய் நீ இருக்க
வெரும் உடலாய் நான்!!!
தொலைதூர வெளிச்சம்
என்னவளின் பிம்பமோ
வானில் அழகாய் நிலவு !!!
காதல் உணர்வு
கவலை மறந்தது
காதலன் காதலிக்கு...
கவலை சேர்ந்தது
காதலால்
பெற்றோருக்கு...
காதல் நோயா
காதல் போதயா
மனதை அழிக்க...?
விடை கிடைக்காமல்
விடை தேடி செல்லும்
காதலன்...
விடையுடன் வருவான்
நம்பிக்கை காத்திருப்பு
காதலிக்கு..
விடை
கௌரவ குடும்பம்
ஏமாற்றம் காதலுக்கு....!
காதல் கடிதம்
எழுத ஆரம்பித்தேன் ,
பின்புதான் புரிந்தது
கடிதத்தில் எழுதுமளவிற்கு
என் காதல் குறுகியது அல்ல என்று!!!
வீதியில் தொலைந்த குழந்தையும்
காதலில் தொலைந்த நானும்
தேடிக்கொண்டு இருக்கிறோம்
எங்கள் உறவை ...!!!
சின்னஞ்சிறு மெல்லிய சிறகை
சத்தமின்றி சிறகடித்து
வானில் பறக்கும்
வண்ணத்துபூச்சி ஆகிறேன்
பூவே!
உன் இதழில்
முத்தமெனும் தேன் எடுக்க
வரும் வேளையில் ...!!!
அவள் குனிந்த தலை நிமிராமல்
நடந்து வந்த விதம்
தொலைத்த ஒன்றை தேடுவதாய் எண்ணினேன் !
அவள் இதுவரை !
ஓவியனும் தீட்டாத வர்ணம்
சிற்பியும் செதுக்காத அழகிய சிலை !
கோடி விண்மீன்களின் நடுவில்
நான் கண்ட அழகிய நிலவு அவள் !
பட்டை தீட்டாத
வைரம் பளிச்சிட கண்டேன்
அவளின் பற்களாக !
அவள் என்னருகில் வந்து நிற்பதால்
சிலிர்ப்பூட்டும் மழை சாரலை உணர்ந்தேன் !
கையில் கடிகாரம் இருந்தும்
நேரம் துளைத்தேன்
அவள் அருகில் இருப்பதால் !
அவளுடன் செல்லும் பேருந்து பயணம்
இறங்கும் இடம் தாண்டி செல்வேனோ ?
நினைக்கவில்லை !
விரைவில் முடிந்த
பேருந்து பயணத்தில் தொடங்குகிறேன்
என் இனிய காதல்
நீ பிறந்தவுடன்
உன்னை கையில்
ஏந்தியவன் நான் !
உன் பாதம் மார்பில்
உதைக்க உண்டான வலி
உதட்டில் சிரிப்பை தந்தது !
உன்னை முத்தமிடும் பொழுதெல்லாம் வந்த
உன் அழுகையை உணர்ந்தேன்
என் மீசை குத்தியதால் !
நீ கைதட்டி துள்ளி குதித்திட
கை கட்டி வேடிக்கை பார்த்து
ரசித்தவன் நான் !
தாமரை இதழ் பிரித்து
முத்துகள் பளிச்சிட
உன் சிரிப்பை கண்டேன் !
துள்ளி குதித்து
மான் என ஓடிடும்
கால்களை கண்டேன் !
நீ கொஞ்சி விளையாடிடவும்
அடித்து விளையாடிடவும்
நீ விரும்பும் பொம்மையாக நான் !
நீ தடுக்கி விழுந்ததால்
உன்னை தடுக்கி விட்டதாக
பழி சுமந்தது கல் !
நீ
படித்து வாங்கிய பட்டத