PrabhuNagu - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : PrabhuNagu |
இடம் | : |
பிறந்த தேதி | : 04-Apr-1992 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Mar-2016 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 29 |
ஆயிரம் காரணம் உண்டு
நான் உன்னை விட்டுச் செல்ல
இருந்தும் ஒரே ஒரு காரணம் மட்டுமே
சொல்வேன்-நான் உன்னோடு வாழ
நீ என் உடல் அல்ல உயிர் ...................
மனைவி கூறுவது தர்மம்,அவள் தரப்பில் நியாயம் உண்டு ,என்றாலும் உறவுகளுக்கிடையில் தர்மம் ,நியாயம் பார்த்து நடந்து கொள்ள வேண்டுமா அல்லது கண்முன் தவறு என்று தெரிந்தும் அமைதியாக செல்ல வேண்டுமா ????
ஒரே ஒரு உறவுக்காக தன் முகவரியையே மாற்றி வரும் மனைவி, தன் கணவனிடம் எதிர் பார்க்கும் அதிகபட்ச எதிர்பார்ப்பு என்னவாக இருக்க வேண்டும்???
இக் கேள்விக்கான தங்களின் பார்வையிலான பதில்களை பகிருங்கள் தோழர்களே........
ஒரே ஒரு உறவுக்காக தன் முகவரியையே மாற்றி வரும் மனைவி, தன் கணவனிடம் எதிர் பார்க்கும் அதிகபட்ச எதிர்பார்ப்பு என்னவாக இருக்க வேண்டும்???
கனவுகளுடன் நீ
காதலுடன் நான்
கண்ணில் நீ
கண்ணீருடன் நான்
இசையில் மிதந்து நீ
திசையை மறந்து நான்
மொத்தத்தில்,
என்னை மறந்து
தூக்கத்தில் நீ
உன்னை நினைத்து
ஏக்கத்தில் நான்.........
ஒவ்வொரு நொடியும்
இருவரும் சண்டையிட்டாலும்
ஒரு நொடி உன்னை காணாவிட்டால்
பதறுகிறது என் உள்ளம்
நான் தொலைத்தது
உன்னையா?? என்னையா?? என்று...
காதலும் கள்ளத்தேனும்
ஒன்றுதான் ,
பிறர் அறியாமல்
பருகினால் மட்டுமே
அதன் ஆழமான
ருசி தெரியும்.....
தேடாமல் கண்டெடுத்த
தெய்வத்தைவிட்டு
தேடித் திரிந்தேன்
தெருக்கள் எல்லாம்...
அம்மா!!!
நீ திட்டும் பொழுதெல்லாம்
சீண்டினேன் -இன்று
உன் திட்டல் என்னைத் தீண்ட
வேண்டினேன்...
காற்றுடன் போட்டியிட்டேன்
சுற்றித்திரிய - இன்று
காத்திருக்கிறேன் உன்
கட்டுப்பாட்டில் கிடக்க...
ஆசைகள் ஆயிரம் உண்டு
அன்னை உன் மடியில் படுத்து பேச,
இருந்தும் நாட்கள் கிடைக்கவில்லை
உன்னை காண...
அம்மா ,
உன்னை கட்டியணைத்து
கதைகள் பல பேசவேண்டும்,
உன்னை பிரிந்து நான்
பட்ட வேதனையையும்
தொட்ட துயரத்தையும்
கண்ணீரில் பேச வேண்டும்..
எங்கேயோ நீ- உன் நினைவில்
இங்கே நான்.
வாழ்க்கை தேடி வந்தேன்
வழி
மரணத்தின் முடிவில்
வாழ்வின் அருமை
நம் மனித வாழ்க்கை !!!