அத்தை இனி அன்னையடி

அத்தை இனி அன்னையடி
அதில் உனக்கு வேண்டாம் கலக்கமடி
அன்னை இனிப் பாடிடவா
ஆரிரரோ தாலாட்டு
மையிட்ட கண்ணிரெண்டை
மகளே நீ மெல்ல மூடு
கரும் சுருள் முடியைக் கொஞ்சம் கைகளால் கோதிடவோ?
சித்திரமே என் செங்கரும்பே
இரத்தினமே பசும் பொற்குடமே
பச்சை மரகதமே நீ பால் உண்டு நித்திரை செய் ஆராரோ பாடிடத்தான் உன் அத்தையும் பேராசை கொண்டாள்
பட்டே என் பனிமலரே அத்தைமடியில் நீ உறங்கு....

எழுதியவர் : அஸ்லா அலி (3-Sep-19, 11:57 am)
சேர்த்தது : அஸ்லா அலி
பார்வை : 82

மேலே