என்னை மறந்து நான் நின்றேன்

பசுமை விரியும் இளமை கனியும்
முல்லைக் கொடி மலர் மணம் வீச
பக்கம் வந்து படர்ந்து நின்றது
அதன் ரோஜா மலரிதழ்கள் தானசைய
"பாதை எங்கே என்றது'
குரல் பாடும் குயில் பாட்டு
என் செவியில் கேட்க
ஒருகணம் நோக்கினேன்
ஆஹா !இறை சிற்பியின் படைப்பில்
இவ்வாறு ஓர் அற்புதமா ?
என்ன அழகு எத்தனை சிறப்பு
குறைவில் குறைவு நிறைவில் நிறைவு
அவன் அளவெடுத்து கச்சிதமாய்
அலங்காரமாய் தைத்த சட்டை
அவளுடல் அணிந்து நின்றிருந்தாள்
என்னை மறந்து நான் நின்றேன்