நலம் அறிய ஆவல்
உன் நினைவால் வாடும் உள்ளம்
உன் வரவை தேடும் தினம்
வண்ணவிழியோரம் வழிந்தோடும்
நீரருவி வைகையென பெருக்கெடுக்கும்
கண்ணாளன் உன் நலனை
எண்ணி கன்னிமனம் வாடுதையா
எங்குதான் நீ சென்றாலும்
எனை நீதான் மறந்தாலும்
உன் நலனை உள் மனது நாடுது பார்
நலம் அறிய ஆவல் கொண்டேன்
உனைக்காக்க இறையை தினம்
உருகி உருகி கேட்க்கின்றேன்
நிறைவான சுகத்துடன் நீடூழீ வாழுமையா.....,...