கொண்டேன் காதல் தாகம்

காற்று வீசிய திசையில்
இலையாய் பறந்து சென்றேன்
நேற்று நடந்த நிகழ்வை
நினைத்துப் பார்த்தே நின்றேன்

எந்தன் பாதை முன்னே
புதிதாய் பிறந்த விண்மீன்
தரையில் நடக்கக் கண்டேன்
கண்டதும் காதல் கொண்டேன்

மின்னல் போன்ற வேகம்
மறைந்தே போனாள் மேகம்
கொண்டேன் காதல் தாகம்
காதலித்தால் மட்டுமே ஆகும்

சட்டென மறைந்த உன்னை
நெஞ்சில் படமாய் பிடித்தேன்
இதயம் மெல்ல மடித்தேன்
ஓவியம் உன்னை வடித்தேன்

தூக்கம் தொலைத்தே விட்டேன்
ஏக்கத்தை செடியாய் நட்டேன்
இலையாய் நானும் மாறி
பறந்தேன் உன்னைத் தேடி

எதிரே இதுவென்ன கனவா
சிரித்த படியொரு வானவில்
என்வாய் திறக்கும் முன்னே
மூன்று வார்த்தைகள் உரைத்தாய்

இதயம் போடுது ஆட்டம்
வியப்பாய் பார்க்குது கூட்டம்
தேனாய் உரைத்த வார்த்தைகள்
"காதல் சொல்ல வந்தேன்"

எழுதியவர் : அ_வேளாங்கண்ணி (4-Nov-17, 9:46 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 110

மேலே